நாடக உலா: விநோத விடுமுறை

By யுகன்

ணியின் நிமித்தமாகவும் பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கும் குடும்பத் தலைவர்களின் குடும்பம் எப்படி இருக்கும்? அவர்களின் வீட்டில் என்னென்ன பிரச்சினைகள் வரும்? அவர்களுடைய குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தான் டம்மீஸ் வழங்கும் ‘விநோத விடு முறை’ நாடகம். புதுப்பொலிவுடன் விளங்கும் ஆர்.ஆர்.சபாவில் நாடகத் தைப் பார்ப்பதே நல்ல அனுபவமாக இருந்தது.

சந்தியா, சேகர் (எப்போதுமே மனைவிக்கே முன்னுரிமை அளிப்பவர்), ஸ்ருதி, பிரணவ், ஸ்ருதியின் தாத்தா இவர்கள்தான் முக்கிய பாத்திரங்கள். ஒன்றரை மணிநேர நாடகமும் ஒரேயொரு வீட்டிலேயே நடக்கிறது. அதே நேரத்தில் சலிப்பில்லாமலும் காட்சிகள் விறுவிறுவென நகர்கின்றன.

கணவனும், மனைவியும் வாட்ஸ்அப்பில் மட்டுமே பேசிக்கொள்ளும் அளவுக்கு பிஸி. பிரணவ்வின் நட்பு வட்டம், கிரெடிட் கார்டு செலவுகள், விதவிதமான செல்போன்களுக்கான கட்டணம் என தறிகெட்டுத் திரியும் ஊதாரித்தனத்தைக் கேட்பதற்கு ஆளில்லை. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் அன்பாக அரவணைத்துச் செல்லும் ஸ்ருதி. அவருக்கு அனுசரனையாக இருக்கும் அவரின் தாத்தா.

அப்பா, அம்மாவோடு இருக்கும் வரனை தவிர்த்துவிட்டு, பணக்கார வீட்டுப் பையனை ஸ்ருதிக்கு திருமணம் செய்துவைக்க சந்தியா முயற்சிக்கிறார். ஸ்ருதியைப் பெண் பார்க்க வரும் நாளில் தான் சேகருக்கு போர்டு மீட்டிங். அவர் உருவாக்கிய நிறுவனத்திலேயே அவருடைய தலைவர் பதவி ஊசலாடுகிறது. இதே நாளில்தான் பிரபல தொழிலதிபரான சேகரின் வீட்டுக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வருகிறது. செல்போன் உள்ளிட்ட எந்த தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன் படுத்த முடியாத நிலையில், கணவனும், மனைவியுமே பல ஆண்டுகளுக்குப் பிறகு மனம் விட்டுப் பேசுகின்றனர். லைஃப் ஸ்டைலுக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையையே தொலைத்துவிட்டிருப்பதை உணர்கின்றனர். மகனின் ஊதாரித்தனத்தை கண்டிக்கின்றனர். மகளுக்கு அவள் விரும்பும் அப்பா, அம்மாவோடு இருக்கும் பையனுக்கே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர்.

ஒட்டுமொத்த நாடகத்தையும் ஸ்ருதியும் (ப்ரீத்தி ஹரி), ஸ்ருதியின் தாத்தாவாக நடித்த ஸ்ரீதரும் தாங்கினர். இசையும், இயக்கமும், காலத்துக்கு ஏற்ப அரசியல் தாளிதத்துடன் கூடிய வசனங்களும் நாடகத்தின் பலம். ஸ்ருதியின் அம்மாவாக வரும் சந்தியாவின் பாத்திரம் ஆடம்பரமான ஆளுமைக்கும் அசட்டுத்தனத்துக்கும் இடையே ஊசலாடுகிறது.

ரெய்டு முடிந்தவுடன் சேக ரின் நேர்மையைப் பாராட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளி யேற வேண்டிய அதிகாரி, மீண்டும் வீட்டினுள் இருக்கும் இன்னொரு அறைக்குள் நுழைந்துவிடுவார். உடனே சமயோஜிதமாக சேகர் (ஸ்ரீவத்ஸன்) பாத்திரம் தன் மகளிடம் “ஸ்ருதி… சாரை பத்திரமாக வாசல்வரை சென்று அனுப்பிவிட்டு வா” என்று சமாளிக் கும்!

டம்மீஸ் நாடக் குழுவின் 20-வது ஆண்டையொட்டி ஆர்.ஆர்.சபாவில் நாடகத் திருவிழா நடக்கின்றது. இலவச அனுமதிச் சீட்டை dummiesdrama.com இணைய தள முகவரியில் பதிவுசெய்து பெறலாம்.

ஆர்.ஆர். சபாவில் அரங்கேறவிருக்கும் நாடகங்கள்:

டிசம்பர் 28 – அர்த்தநாரி (மாலை 7 மணி)

டிசம்பர் 29 – ரகுராமம் (மாலை 7 மணி)

டிசம்பர் 30 – எங்கிருந்தோ வந்தான் (மாலை 7 மணி)

டிசம்பர் 31 – குறு நாடகங்கள் (காலை 11 மணி)

ஜனவரி 1 – சியாமளம் (மாலை 7 மணி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்