சென்னைக்கு மேலும் ஒரு உலகப் படவிழா!

By ஆர்.சி.ஜெயந்தன்

சென்னையில் டிசம்பர் மாதக் குளிருக்கு நடுவே, தமிழ்நாட்டின் உலக சினிமா ரசிகர்களை கடந்த 20 ஆண்டுகளாக உற்சாகப்படுத்தி வருகிறது ‘சென்னை சர்வதேசப் படவிழா’. இதை இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேசன் மாநில அரசின் நிதி உதவியுடன் நடித்தி வருகிறார்கள். இதுவொருபுறம் இருக்க, இந்த ஆண்டு முதல் புதிதாக மேலும் ஒரு உலகப் படவிழா சென்னைக்கு அணி செய்ய இருக்கிறது. தரமான தமிழ்த் திரைப்படங்களை உலகப் படவிழாக்களுக்கு அனுப்பி, தமிழ் படைப்பாளிகளுக்கு உதவி வருபவர், இயக்குநரும் விமர்சகருமான உலக சினிமா பாஸ்கரன். இவரது முன்னெடுப்பே இந்த புதிய உலக சினிமா படவிழா.

‘சென்னை உலக சினிமா விழா’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்பட விழா, சென்னையில் வருகிற செப்டம்பர் 1,2, மற்றும்3 ஆகிய (வெள்ளி, சனி, ஞாயிறு) மூன்று நாட்கள், வடபழனி தேவி கருமாரி திரையரங்கில் நடக்கிறது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன், இயக்குநர், எழுத்தாளர் ராசி அழகப்பன், செந்தில் குமரன் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

உலக சினிமா பாஸ்கரன் பேசும் போது: “ இப்படவிழாவில் 15 படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. தமிழ் சினிமாவின் தந்தை நடராஜ முதலியார் நினைவை போற்றும் வகையில் வேல்முருகன் பெரியவன் உருவாக்கிய ‘அடவி’ என்ற மௌனத் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் பல்வேறு பிரிவுகளில் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்ட படங்கள், தமிழ் விண்டேஜ் உலக சினிமா, தமிழ் ஃபெஸ்டிவல் வெர்ஷன் படங்கள், தமிழ் சிறுவர் சினிமாக்கள் எனப் பல பிரிவுகளில் திரையிடப்படுகின்றன. அதுமட்டுமின்றி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்றை முன்னிட்டு ‘பராசக்தி’ உள்ளிட்ட அவரது முக்கியத் திரைப்படங்கள் திரையிடப்படவிருகின்றன. இப்பட விழாவில் படைப்பாளிகள் படங்களை விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் வாங்கப்படவில்லை. திரைப்பட விழா படங்களை காண வரும் பார்வையாளர்களுக்கும் கட்டணம் கிடையாது. இதுவரை 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. அவற்றிலிருந்து 15 படங்களை தேர்வு செய்து திரையிடுகிறோம்.” என்றார்.

உலக சினிமா பாஸ்கரன், ராசி அழகப்பன், செந்தில் குமரன்

செந்தில் குமரன் சண்முகம் பேசும்போது: “படம் இயக்க வரும் இளம் இயக்குநர்கள் தங்களது படங்களை திரையரங்குகளில் வெளியிட ஒரு வடிவத்திலும், திரைப்பட விழாக்களில் வெளியிட ஒரு வடிவத்திலும் எடுக்க இது போன்ற திரைப்பட விழாக்கள் துணையாக இருக்கும். அதற்காகவே ‘இராவணக் கோட்டம்’, ‘வெள்ளிமலை’ ஆகிய படங்களின் ஃபெஸ்டிவல் வெர்சன்களை திரையிடுகிறோம்” என்றார்.

இயக்குனர் ராசி அழகப்பன் பேசும் போது: “வெளிநாடுகளில் சினிமாவுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. படைப்பாளிகளையும் எழுத்தாளர்களையும் திரைப்பட விழாக்கள் தான் கொண்டாடுகின்றன. இந்த 15 படங்களும் தகுதி உள்ள படங்கள். இந்த விழாவிற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று பேசினார். குறைந்த செலவில் உலக சினிமாவை உருவாக்குவது எப்படி என்கிற பயிற்சி பட்டறையை ஒளிப்பதிவாளர், இயக்குநர் விக்னேஷ் குமுளை, நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத் ஆகிய இருவரும் இணைந்து நடத்த இருக்கிறார்கள்.
இருவரும் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகளை பெற்று வரும் ‘கூழாங்கல்’ மற்றும் ‘கற்பரா’ ஆகிய திரைப்படங்களை செம்மையாக உருவாக்கிய வித்தகர்கள்” என்றார்.

செய்தியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு உலக சினிமா பாஸ்கரன் பதிலளிக்கும்போது, “திரைப்பட ரசனை குறித்த பயிற்சி பட்டறையை பல திரைப்பட இயக்குநர்கள் இணைந்து நடத்த இருக்கிறார்கள். சிறுவர்களுக்கான சினிமா திரையிடும்போது மட்டும் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏனைய விழா திரைப்படங்களை காண சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறுவர் திரைப்படங்களை காண வரும் சிறுவர்களுக்கும் அவர்களுடன் துணையாக வரும் பெற்றோர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அரங்கில் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார். கூடுதல் விவரங்களை 9003917667 என்கிற மொபைல் எண்ணைத் தொடர்புகொண்டு அறியலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்