கடந்த 30 ஆண்டுகளைக் கடந்து நடித்து வரும் சார்லி, இதுவரை 800 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஜூன் மாதம் வெளியான ‘எறும்பு’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள், ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது சார்லி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஃபைண்டர்’ என்கிற புதிய படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அரபி புரொடக்ஷன் - விஜயன் வென்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் குஞ்சுமோன், தனஞ்ஜெயன், வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது “சார்லி சிறந்த நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். சினிமாவில் இன்றளவும் தாக்குப்பிடிப்பதற்கு அவரது நடிப்புத் திறமையே காரணம்.
இன்றளவும் நாடக மேடையிலும் நடித்து வருகிறார், அவர் ஆயிரம் படங்களைத் தொட்டு முன்னேற வேண்டும் என்பது என் ஆசை. அவர் நல்லப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தப் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இயக்குநர் வினோத்துக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
தொடரும் கூட்டணி: அப்பா சத்யராஜ் - மகன் சிபிராஜ் இணைந்து நடித்து வெற்றிபெற்ற படம் 2016 இல் வெளியான ‘ஜாக்சன் துரை’. ஏ.பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார். இந்தக் கூட்டணி தற்போது இரண்டாம் பாகத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறது. ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் - ஐ ட்ரீம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ் - சிபிராஜுடன் சம்யுக்தா, மனிஷா, சரத் ரவி உட்படப் பலர் நடிக்கின்றனர்.
» பிராக் ஓபன் டென்னிஸ் தொடர் | 2-வது சுற்றில் அங்கிதா
» விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் குகேஷ்
கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பு 1940இல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றில் இருந்த ஆங்கிலேய பிரபு ஒருவரின் அரண்மனையில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் காலக் கட்டிடம் செட், அப்போது பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் எனப் படப்பிடிப்புக்கான கலை இயக்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் ‘ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்’ என்று தலைப்பிட்டு இப்படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சி.. கோலிவுட்டின் ஹாரர் படங்கள் கலகலப்பாக மாறிவிட்ட காலகட்டம் இது. உண்மையாகவே பயமுறுத்திய தமிழ் ஹாரர் படங்களின் வரிசையில் அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி’க்கு இடம் உண்டு. கடந்த 2015இல் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம், 8 வருடங்களுக்குப் பிறகு ‘டிமான்ட்டி காலனி 2' என்கிற தலைப்பில் முழுவதும் தயாராகிவிட்டது.
அருள்நிதி நாயகனாகத் தொடர, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இப்படம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகச் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அதன் கிளைமாக்ஸுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் கூறியிருக்கிறார்.
பிரமாண்ட பட்ஜெட்டில், ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ். இசை, ரவி பாண்டியின் கலை இயக்கம் எனச் சிறந்த தொழில்நுட்பக் குழுவின் கூட்டுழைப்பில் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் அருள்நிதி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, அவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்து கதையும் உருவாக்கமும் பிடித்ததால் பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தில் பாபி பாலச்சந்திரன் படத்தை வாங்கியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago