தமிழ் சினிமாவில் ஆவி, அமானுஷ்யம் உள்ளிட்ட பேய் வகையறா படங்களின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. என்றாலும் மென்பொருள் துறையைத் தொடர்புப்படுத்தி உருவான ‘லிஃப்ட்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். தற்போது அதே பாணியில் நவீன வாழ்க்கையுடன் தொடர்புடைய ஹாரர் த்ரில்லர் படம் ஒன்றை 15 நாட்களில் படமாக்கி அசத்தியிருக்கிறார் விகாஸ் ஆனந்த்.
மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஆஹா தமிழ் ஓடிடி வெளியிடுகிறது. கிஷன் தாஸ், மோனிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஒரு வாகன விபத்தையும் அதன்பிறகு நடக்கும் அமானுஷ்ய விளைவுகளையும் விவரிக்கிறது. கிஷன் தாஸ், அவரது அக்கா, தோழி, நண்பன் ஆகியோர் இணைந்து காரில் ஒரு ஜாலி ட்ரிப் கிளம்புகிறார்கள்.
எதிர்பாராத வகையில் ஒரு விபத்துக்குக் காரணமாகிவிடும் அவர்கள், போலீஸ், சட்டத்தின் தண்டனை ஆகியவற்றுக்குப் பயந்து தப்பித்து வந்துவிடுகின்றனர். வீட்டுக்கு வந்தபிறகு கிஷனின் அக்காவுக்கு மனசாட்சி உறுத்த, அவரிடமிருந்து சிக்கல் தொடங்குவதாகக் கதை செல்கிறது. ஹாரர் படமாக இருந்தாலும் நவீன வாழ்க்கையில் கொண்டாட்டங்கள் எல்லை மீறிச் செல்பவையாக இருக்கக் கூடாது என்பதை ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பயமுறுத்திச் சொல்லியிருக்கிறோம்’ என்கிறார் இயக்குநர்.
வழக்கத்துக்கு மாறாக.. இயக்குநர் அட்லீ - ஷாருக் கான் கூட்டணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாகி வந்த ‘ஜவான்’ படத்தின் முதல் முன்னோட்டம் கடந்த வாரம் வெளியாகி சமூக வலைதளங்களில் ‘டிரெண்ட்’ ஆகியிருக்கிறது. முதலில் டீசர், பிறகு டிரெய்லர் என வெளியிடுவதே திரையுலகில் வழக்கம். அதை மாற்றும் விதமாக ‘ப்ரிவியூ’ என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோட்டமானது, ‘ஜாவன்’ படமும் அதில் ஷாருக் கானின் கதாபாத்திரமும் எப்படியிருக்கும் என்பதை ரசிகர்களுக்குச் சொல்லிவிட்டது.
» கனடாவில் சரக்கு திருட்டில் ஈடுபட்டுவந்த 15 இந்தியர்கள் கைது
» குஜராத்தில் விபத்து நடந்த இடத்தில் கூட்டத்துக்குள் கார் புகுந்து 9 பேர் உயிரிழப்பு
இந்த முன்னோட்டத்தைப் பார்த்த ஷாருக் கான், இயக்குநர் அட்லீயை, ‘யூ ஆர் த மேன்!’ என்று குறிப்பிட்டு, உணர்ச்சி மிகுதியுடன் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் ஆகியோரையும் நினைவு கூர்ந்திருந்தார். படத்தில் இடம்பெற்றுள்ள அவர்களது தோற்றங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஷாருக் கானின் வியப்புக்கு எதிர்வினையாற்றும் விதமாக, அட்லீ, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிங் கான்’ என்கிற டைட்டில் பாடலைப் பாடியிருக்கும் இந்திய - அமெரிக்க ராப்பரான ராஜகுமாரி, நடன இயக்குநர் ஷோபி பால்ராஜ், எடிட்டர் ரூபன் தொடங்கிப் படக்குழுவைச் சேர்ந்த பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் ஷாருக் கானுக்கு ட்விட்டரில் பதிலளித்து வருகின்றனர்.
ஹாரிஸுக்கு பாராட்டு: டூயட் பாடல்களைத் துள்ளல் மிகுந்த ‘பீட்’களுடன் மெலடியாகத் தருவதில் கை தேர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். கௌதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை கூட்டணியில் வெளியாகும் படங்கள் இவ்வகை இசைக்காகவே அதிகம் கொண்டாடப்படும். இதுவரை ராப் பாடல்கள் எதற்கும் இசையமைத்திராத ஹாரிஸ் முதல் முறையாக, கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘துருவ நட்சத்திரம்: சேப்டர் 1’ படத்தில் இடம்பெறவுள்ள ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்கிற ராப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலைப் பாடலாசிரியர் தாமரை எழுதவில்லை. ‘பால் டப்பா’ என்கிற தமிழ் ராப்பர் எழுதிப் பாடியிருக்கிறார். இணையத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 20 லட்சம் முறைப் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலுக்கான இசையையும் அதில் இடம்பெற்றுள்ள ஒலிகளின் தரத்தையும் கேட்டு ஹாரிஸை விக்ரமின் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருப்பவர் ரிது வர்மா. இவர்களுடன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அடுத்தது கமலின் தோற்றம்! - கன்னடப் படவுலகில் தயாராகும் ‘பான் இந்திய’ சினிமாக்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்குபெறுவது வழக்கமாகிவிட்டது. தமிழ் நடிகர்களை மருந்துக்குக் கூட காட்ட மாட்டார்கள். அதேநேரம், தெலுங்கு சினிமாவில் தயாராகும் ‘பான் இந்திய’ படங்களில் தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கினை எஸ்.எஸ்.ராஜமௌலி தொடங்கி வைத்தார்.
அந்த வரிசையில் தற்போது, தெலுங்குப் படவுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் படம் ‘ப்ராஜெக்ட் கே’. இதில் பிரபாஸ் நாயகனாக நடித்தாலும் கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள்.
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் திரைப்படமாக எழுதி, இயக்கிய நாக் அஸ்வின்தான் இப்படத்தின் இயக்குநர். கமல்ஹாசனுக்கு பிடித்தமான அரசியல் புனைவுக் கதைக் களம். இதில், தீபிகா படுகோன், திஷா படானி என இரண்டு முன்னணி பெண் நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். சமீபத்தில் தீபிகா படுகோனின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டது. தற்போது சூப்பர் ஹீரோ படங்களில் ‘சூப்பர் பவர்’ கொண்ட கதாபாத்திரங்கள் அணிவது போன்ற ஆடையை அணிந்துள்ள பிரபாஸின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
‘அடுத்த முதல் தோற்றத்தில் நாங்கள் பார்க்கவிருப்பது கமல்ஹாசனா, அமிதாப் பச்சனா?’ என்று கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் படத்தை ஹாலிவுட்டில் விளம்பரப்படுத்தும் வேலையில் படக்குழு இறங்கியிருக்கிறது. இதற்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன், ஹாலிவுட் வீதியில் நடந்து செல்லும் படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago