கடந்த 2019இல் கரோனா பெருந்தொற்று பேரலையாகத் தொடங்கும் முன் 92வது ஆஸ்கர் விருது விழாவைக் கலக்கியது ஒரு தென்கொரியத் திரைப்படம். அதுதான் ‘பாராசைட்’. சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற முதல் அயல் மொழித் திரைப்படம் என்கிற பெருமையை 'பாராசைட்' பெற்று வரலாறு படைத்து மட்டுமல்ல. 6 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருந்த அப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை ஆகிய விருதுகளையும் வென்றது.
ஆனால், ‘பாராசைட்’ படத்துக்கு முன்பே தென்கொரியத் திரைப்படங்கள், இந்திய வெகுஜன சினிமாவில் உருவாக்கிய தாக்கம் அபரிமிதமானது. மலையாளத்தில் ஜித்து ஜோசப் எழுதிய இயக்கிய ‘திரிஷ்யம்’ தொடங்கி பல படங்கள் வெற்றிபெற்ற தென்கொரியப் படங்களின் கதைக்கருக்களைத் தழுவி, இந்தியத் தன்மையுடன் வெளிவந்தன. நலன் குமாரசாமி, ‘மை டியர் டெஸ்பரேடோ’ ( My Dear Desperado) என்கிற தென்கொரியத் திரப்படத்தை அதிகாரபூர்வமாக ‘காதலும் கடந்து போகும்’ படமாக மறு ஆக்கம் செய்தார். அந்த அளவுக்கு தமிழ் நாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருக்கமான பந்தந்ததைக் கொண்டுள்ள தென்கொரிய சினிமாவிலிருந்து வெளியாகும் உலக சினிமாக்கள் சர்வதேசப் படவிழாக்களில் கவனப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்கால தென்கொரியாவின் 5 சிறந்த உலகத் திரைப்படங்களை ஜூன் 9ஆம் தேதியான நாளை தொடங்கி 11ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தென்கொரியத் திரைப்பட விழாவாக சென்னையில் திரையிடுகிறார்கள். சென்னை, மந்தைவெளி இசைக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் தாகூர் திரைப்பட மையத் திரையரங்கில் நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான தென்கொரியப் படவிழாவை இயக்குநர் வசந்த் சாய், நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைக்கிறார்கள். .
திரையிடலில் கவனம் பெற இருக்கும் அந்த 5 படங்கள், ‘வொண்டர்ஃபுல் நைட்மேர்’ (Wonderful Nightmare), ‘மை லைவ்.. மை பிரைட்’ (My Love, My Bride), ‘மூவ் தி கிரேவ்’ (Move the Grave), ‘ தி ஹில் ஆஃப் விண்ட்’ (The Hill of Wind). ‘கிரானி பொயட்ரி கிளப்’ (Granny Poetry Club) ஆகியன. சென்னையில் இயங்கிவரும் தென்கொரியாவுக்கான தூதரகத்துடன் (Consulate General of the Republic of Korea in Chennai) இணைந்து இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்(ICAF) திரைப்படச் சங்கம் இந்தத் திரைப்பட விழாவினை ஒருங்கிணைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago