இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் 1918இல் தோன்றிய சென்னைத் தொழிலாளர் சங்கம். இச்செய்தி இடம்பெறாத வரலாற்று நூல்கள் இருக்காது. ஆனால், இதற்குமேல் சென்னைத் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம், அதன் போராட்டங்கள் பற்றிய நம்பகமான வரலாறு பல காலம் இல்லாமலிருந்தது. அக்குறையைப் போக்கியது தே.வீரராகவனின் ‘சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு’ (அலைகள் வெளியீட்டகம், 2003). இந்நூல் வீரராகவனின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் தமிழ் வடிவம்.
அக்காலத்து அரசாங்க ஆவணங்கள், அறிக்கைகள், காவல்துறைக் குறிப்புகள் மட்டுமல்லாமல் ‘தேசபக்தன்’, ‘நவசக்தி’, ‘ஜனசக்தி’, ‘நியூ இந்தியா’, ‘தி இந்து’ முதலான இதழ்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்திருந்தன. தொழிலாளர் இயக்கத்துக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட, ஈ.எல்.ஐயரை ஆசிரியராகக்கொண்ட, ‘சுதர்மா’ என்கிற ஆங்கில இதழை இந்த ஆராய்ச்சியின்போது வீரராகவன் கண்டெடுத்தார். இவற்றோடு நில்லாமல் சென்னைத் தொழிலாளர் இயக்கத்தின் மூலவர் எனத்தக்க கோ.செல்வபதி செட்டியார் முதல் ஸி.எஸ்.சுப்பிரமணியம், பி.ராமமூர்த்தி, கே.முருகேசன், ஏ.எஸ்.கே.ஐயங்கார், கஜபதி முதலான இயக்கத் தலைவர்களையும் நேரில் கண்டு தகவல்கள் திரட்டினார். பி.ஆர்.கே.சர்மா, ஈ.எல்.ஐயர் போன்ற தலைவர்களின் குடும்பங்களைச் சந்தித்துப் பல ஆவணங்களைப் பெற்றார். இந்த ஆராய்ச்சிக்காகச் சென்னையிலுள்ள நூலகங்கள் மட்டுமல்லாமல் புது டெல்லியில் இருக்கும் நேரு நினைவு நூலகம், தேசிய ஆவணக்காப்பகம், பி.சி.ஜோஷி ஆவணக்காப்பகம் போன்றவற்றையும் வீரராகவன் பயன்படுத்திக்கொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
42 mins ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago