மற்ற நாடுகளில் எப்படி?

By Guest Author

இந்தியா உட்பட உலகின் பெரும் பாலான நாடுகளில் கோடைக் காலத்தில்தான் கல்வி ஆண்டின் நிறைவுக்குப் பிந்தைய நீண்ட விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் மே மாதம் கோடை விடுமுறை. பிற இந்திய மாநிலங்கள் பலவற்றில் ஜூன் பிற்பகுதி அல்லது இறுதியில்தான் பள்ளி திறக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள், சர்வதேசப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் கல்வியாண்டு தொடக்கம் சற்று மாறுபடுகிறது.

உலகின் பிற நாடுகளின் புவியியல் அமைப்புக்கு ஏற்ப அவற்றின் கோடைக்காலம் மாறுபடுகிறது. பெரும்பாலும் கோடைக் காலம் நிறைவடைந்த பிறகே அனைத்து நாடுகளிலும் பள்ளி களிலும் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்படுகிறது. அந்த வகையில் ஆசிய நாடுகளில் பாகிஸ்தானில் மார்ச் இறுதி, ஏப்ரல் தொடக்கத்தில் புதிய கல்வி ஆண்டு தொடங்குகிறது. மலேசியாவில் ஜனவரி முதல் நவம்பர் வரை என்றிருந்த கல்வி ஆண்டு கோவிட் பெருந்தொற்றால் விளைந்த மாற்றங்களின் காரணமாக 2021க்குப் பிறகு மார்ச் முதல் ஜனவரி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE