அறிவியல் அலமாரி - செயலி புதிது

By செய்திப்பிரிவு

SMS Organizer - Clean, Reminders, Offers & Backup

ரயில் பயணத் தகவல்கள், வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிக் கணக்கு தகவல்கள், நாம் பயன்படுத்தும் முக்கியமான சேவைகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் குறித்த தகவல்கள், இவை தொடர்பான நினைவூட்டல்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய தகவல்கள் நமக்குக் குறுஞ்செய்திகள் வழியாகவே கிடைக்கின்றன. தேவையற்ற பல குறுஞ்செய்திகளால் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தேடி எடுக்கத் தாமதமாகிறது. இந்தச் சிக்கலைப் போக்க எஸ்எம்எஸ் ஆர்கனைஸர் செயலி உதவுகிறது. இந்த வசதிகளையும் மொபைல் இணையம் இல்லாமலே பயன்படுத்தலாம்.

- நந்து

நுட்பத் தீர்வு: Google Fit

கூகுள் வெளியிட்டுள்ள இந்தச் செயலி மூலம் நமது அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொள்ள முடியும். ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதையும் நம் உடலில் எவ்வளவு கலோரிகள் குறைந்துள்ளன என்பதையும் இது நமக்குத் துல்லியமாகத் தெரிவிக்கும். நடக்கும்போது, ஓடும்போது, சைக்கில் ஓட்டும்போது என அனைத்தையும் கூகுள் வாட்ச் அல்லது ஸ்மார்ட் போன் மூலம் நாம் கண்காணித்துக்கொள்ள முடியும். உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தச் செயலியைப் பயன்படுத்துபவர்கள், பாலினம், எடை மற்றும் உயரம் குறித்த தகவல்களைச் சரியாக நிரப்ப வேண்டும்.

- நிஷா

காட்சிவழி கற்கலாம்: அறிவியல் திருவிழா

‘வேர்ல்ட் சயின்ஸ் ஃபெஸ்டிவல்’ (World Science Festival) எனும் யூடியூப் அறிவியல் அலைவரிசை 2008-லிருந்து இயங்கிவருகிறது. இயற்பியல், உயிரியல், மூளைச் செயல்பாடுகள், ரோபோடிக்ஸ், மருத்துவம், வானியல், பொறியியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளை அலசுகிறது இந்த அலைவரிசை. காணொலிகள் நீண்ட, குறுகிய வடிவங்கள் என இரண்டு விதமான இடம்பெற்றுள்ளன.

உரையாடல், விவாதங்கள், குறும்படங்கள், பேராசிரியர்களின் உரைகள் எனப் பல விதங்களில் இந்த அலைவரிசை ஆழமான அறிவியல் உலகத்துக்குள் நம்மை அழைத்துச்செல்கிறது. நியூ யார்க்கைச் சேர்ந்த ‘வேர்ல்ட் சயின்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற தன்னார்வல அமைப்பு இந்த அலைவரிசையை நிர்வகித்துவருகிறது.

- கனி

அலைவரிசையைப் பார்க்க: http://bit.ly/WSFestival

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்