சூபி தரிசனம்: கங்கையின் கரையில் அப்துல்லா

By செய்திப்பிரிவு

மறைஞானி அப்துல்லா ஒரு நாள் கங்கைக் கரையில் அமர்ந்திருந்தார். கங்கை ஆற்றை அவர் ஒரு புத்தகத்தைப் போலப் படித்துக் கொண்டிருந்தார். கங்கை தனது இயற்கையை, தனது ஆழங்களை, தனது அசைவுகளை அவருக்குச் சொல்லி ஓடிக்கொண்டிருந்தது. அவர் ஆற்றின் போக்கில் சென்ற மரத்துண்டைப் பார்த்தார். ஆற்றில் தோன்றும் வட்டங்களையும் கோடுகளையும் சூரியனின் கிரணங்கள் ஊடுருவி வண்ணங்களை உருவாக்குவதையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

மறைஞானி ஆற்றில் போகும் இலைகளைப் பார்த்தார். ஆற்றின் போக்கில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தன. அவை சமுத்திரத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தன. ஆறு சுழித்தோடும் இடங்களில் சில இலைகள் தூக்கி எறியப்பட்டு கரையில் விழுந்தன. கரையில் விழுந்த இலைகள் சூரியனில் காய்ந்து மக்கி மடிந்துபோவதைப் பார்த்தார்.

“அகத்தில் அமைதியைக் கொண்டிருப்பவர்கள் ஆற்றின் இயல்பை எதிர்க்கவே மாட்டார்கள். அமைதியின் பாதை சமுத்திரத்தை நோக்கிப் போவது. ஆற்றின் போக்குக்கு எதிராக மாறுபவர்கள் நிம்மதியின்மையின் சுழிப்பில் அலைக்கழிவார்கள்.” என்று உரைத்தார் அப்துல்லா கங்கையைப் பார்த்தபடி.

மன்னனின் பணிவு

பேரரசர் ஷாஜஹான் கோடையில் ஒரு நந்தவனத்தில் உள்ள சிறிய மாளிகைக்கு இளைப்பாறு வதற்காகச் சென்றிருந்தார். நண்பகல் வேளையில் அவருக்குத் தாகம் எடுத்த நிலையில் பணியாளர்களைக் கைதட்டி அழைத்தார். அந்தச் சமயம் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பணியாளர்கள் யாரையும் காண வில்லை. வேறு வழியின்றி எழுந்து ஒரு குவளையை எடுத்துக்கொண்டு கிணற்றை நோக்கிப் போனார்.

நந்தவனத்தில் இருந்த கிணறுக்குச் சென்று தண்ணீரை இறைத்து குவளையில் நீரை நிரப்பினார். தண்ணீர் நிரம்பிய வாளியைத் தன்பக்கம் இழுக்கும் போது பழக்கமில்லாமல் கைவிரலில் வாளிபட்டு வலித்தது. உடனடியாக தன்னுணர்வு ஏற்பட்டு மண்டியிட்டு இறைவனை அழைத்தார்.

“இந்த அனுபவத்தை எனக்கு அளித்ததற்காக உனக்கு நன்றி சொல்கிறேன். கிணற்றிலிருந்து நீர் எடுக்கக்கூடத் தெரியாதவன் நான். ஆனால், உனது பெரும் கருணையால் என்னை மன்னனாக ஆக்கியிருக்கிறாய்.”

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்