இடையாற்றாங்குடி எனும் ஊரில் அரங்கநாதனின் மீது அளவுகடந்த பக்தி கொண்ட நம்பி வாழ்ந்து வந்தார். திருவரங்கத்தில் நடக்கும் உற்சவங்கள் நான்குக்கும் வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் நம்பி. நூறு வயதை எட்டியிருந்த நம்பிகள், வயது முதிர்ச்சி காரணமாக உற்சவத்துக்கு வரமுடியாமல் போனது. நம்பெருமாள் எழும் காட்சியை மானசீகமாகத் தனது மனத்தால் கண்டு ஆனந்தக் களிப்படைந்தார்.
ஆனாலும் அரங்கனது முழுதரிசனக் காட்சியின் தாகம் தீரவில்லை. காஞ்சியில் வரதர் குடையழகு, திருவேங்கடவன் மாலையழகு, திருவரங்கம் நம்பெருமானின் நடையழகு என்பார்கள். இடையாற்றூர் நம்பிகள் நம்பெருமானின் உற்சவ நடையழகுக் கம்பீரத்தை காணும் ஆவல் மேலிட கால்நடையாக தள்ளாடியபடியே ரங்கம் வந்து சோ்ந்தார். அங்கே, நம்பெருமாள் ஆறாம் நாள் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நம்பிகள் இறைவனைச் சேவித்து, இறைவா! என்னால் உன் உற்சவத்தை முழுவதும் சேவிக்க நான் கொடுத்து வைக்கவி்ல்லையே என வருந்தினார். அவரது வருத்தம் போக்கும் வண்ணம், நம்பெருமான் அவரைத் திருவரங்கத்தில் நின்றுவிடு என்று கூறி, அவரது உயிரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். நம்பெருமான், ராஜவீதி சென்று கோயில் திரும்பும் முன்னர், ஆலயத்துக்கு அருகே வீழ்ந்தார். நம்பிகளின் உயிர் பிரிந்துவிட்டது.
இடையாற்றாங்குடி நம்பியைப்போலே இறைவன் என்னை நில் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு இறைவனைக் காணும் தாகம் ஏற்படவில்லையே சுவாமி என வருந்தினாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago