சித்திரப் பேச்சு: அணிகலன்கள் பூண்ட குதிரை

By செய்திப்பிரிவு

ஓவியர் வேதா

சுட்டி, பீலீ, குச்சம், சூடாமணி, சிக்குதாகு, சாமரை, வல்லிகை, பல்பிடிக் கண்டிகை, சுருள் திருகு, சேணப்பறி, அங்கவடி, நூபுரப்புட்டில், பசும்பாழி, சிலம்பு, தாழ், தண்டை இவையெல்லாம் புராதன அணிகலன்களின் பெயர்கள். அரண்மனைக் குதிரைகளுக்குத் தலை முதல் கால் வரை அணிவிக்கப்படும் அணிகலன்கள் அவை.

வேகமாகப் பாய்ந்துவரும் இந்தக் குதிரைச் சிலை, குதிரைக்கு அணிவிக்கப்படும் எல்லாவிதமான அணிகலன்களும் அணிவிக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது. காதுமடலின் கீழே ஒரு மலரின் வடிவம், அதைத் தொடர்ந்து கொடி போன்ற அமைப்பு, அதில் ஒரு பெரிய சிம்மம் வாயைத் திறந்தபடி உள்ளது; அதில் ஒரு குட்டிச் சிம்மம் வெளிப்படுகிறது; குதிரையின் கழுத்திலே எத்தனை விதமான அணிமணிகள்; கடிவாளத்தைப் பாருங்கள்; ஒரு பெரிய வளையம்; அதில் சிறிய இரு வளையங்கள்; அதிலிருந்து தொடங்கும் கயிற்றின் முடிச்சுகள் எவ்வளவு அழகாகவும், துல்லியமாகவும் காட்டப்பட்டுள்ளன.

குதிரை தன் வாயைத் திறந்தால் ஏற்படும் அசைவுகளையும் மிகவும் துல்லியமாக வடித்துள்ளார் சிற்பி. பற்களின் அமைப்பும், நாக்கால் மேல் பற்களைத் தொடும்போது ஏற்படும் இடைவெளியையும்கூட விட்டு வைக்கவில்லை. இடைவெளியில் நம் கையை நுழைத்துப் பார்க்கலாம்; குதிரை கடிக்காது. குதிரையின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்துப் பார்த்து நுணுக்கமாக வேலைப்பாடுகளைச் செய்துள்ளார். சேணத்தின் விரிப்பில்கூடச் சிம்மத்தின் தலை பூக்களோடு பூக்களாக உள்ளது. குதிரையின் கால்களுக்குக் கூட அணிகலன்களை அணிவித்து மகிழ்ந்திருக்கிறார் சிற்பி. படத்தில் காட்டப்பட்டுள்ளது குதிரையின் ஒரு பகுதி தான். குதிரையின் தலை முதல் வால் வரை ஒவ்வொரு பகுதியும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குதிரையின் பின்னமடைந்த காது மடல்களையும், இடது முன்னங்காலின் ஒரு பகுதியையும் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் பூர்த்தி செய்து வரைந்துள்ளேன். இந்தக் குதிரையின் பாய்ச்சலை நீங்கள், ராஜ ராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் முருகன் சன்னிதியை வலம் வரும் போது, கோமுகம் அருகே பார்க்கலாம், ரசிக்கலாம்... இது போன்ற சிலைகள் உருவாகக் காரணமான ராஜராஜனையும், தலைமைச் சிற்பியான குஞ்சர மல்லனையும், அவருக்கு உதவிய மற்ற சிற்பிகளையும் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்