துலாம், விருச்சிகம், தனுசு; வார ராசிபலன்கள் - ஏப்ரல் 9 முதல் 15ம் தேதி வரை - 

By செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம்.
எதிர்ப்புகள் விலகும். சூரியன் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.
ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.
பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு நன்மைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மனத் துயரம் நீங்கும். மாணவர்களுக்கு எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
****************************************************************************
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.
கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும்.


வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.
உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்களுக்கு மனமாற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். மன நிறைவடைவதற்காக சில செயல்களை செய்வீர்கள். அரசியல்வாதிகள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு
எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

****************************************************************
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இந்த வாரம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும்.
கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
*******************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்