வார ராசிபலன்கள் 26-03-2020 முதல் 01-04-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம்ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சில் இனிமையால் எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் கூடுதலான வேலைச் சுமை இருக்கும். வர்த்தக ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும்.

வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்குக்கூடக் கோபம் வரலாம். பெண்களுக்கு, தொட்ட காரியங்கள் துலங்கும். கலைத் துறையினருக்கு, பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பணிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களிடம் நன்கு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். புத்தகங்களையும் கருவிகளையும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: நவக்கிரக சுக்கிரனை வணங்க எல்லாப் பிரச்சினைகளிலும் சாதகமான பலன் கிடைக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தைரிய ஸ்தான உச்ச சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் அகலும். விரும்பியது கிடைக்கக் கூடுதல் முயற்சி தேவை. தனாதிபதி குருவின் சஞ்சாரத்தால் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் விலகும். சக ஊழியர் மத்தியில் எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும்.

சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, புதிய நபர்கள் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு, காரியங்கள் நல்லபடியாக முடியக் கடினமாகப் பணியாற்ற வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, போட்டிகள் விலகும். பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள்,செவ்வாய், புதன்.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 5, 9
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமையன்று மாரியம்மனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

தனுசுராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு தனவாக்கு ஸ்தானத்துக்கு மாறுகிறார். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். உறவினர்கள், நண்பர்களுடன் பகை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனோதைரியம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு, கல்வியில் காணப்பட்ட மெத்தனப் போக்கு நீங்கிச் சுறுசுறுப்பாகப் பாடங்களைப் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 3, 6.
பரிகாரம்: சரஸ்வதியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். அறிவுத் திறன் கூடும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். குழப்பங்கள் ஏற்பட்டு முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உத்தியோகத்தில் சின்ன விஷயத்துக்கும் அலைய வேண்டும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, யோகக்காரகன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு, மனம் வருந்தும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களுக்கு, நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 3, 9.
பரிகாரம்: சனிக்கிழமையன்று விநாயகரை வழிபட அனைத்துக் காரியங்களும் சிறக்கும்.

கும்பராசி வாசகர்களே

இந்த வாரம் சுகபாக்கியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்துச் செயல்பட்டவர்கள் ஒதுங்கிவிடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரம் தொடர்பில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பூர்விகச் சொத்துக்கள் தொடர்பில் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும்.

ஆன்மிகப் பயணங்களுக்குத் தயாராவீர்கள். பெண்களுக்கு, மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு,உங்கள் வளர்ச்சிக்காகச் சில திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதற்குக் கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திக் கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: சனிக்கிழமையன்று நந்தீஸ்வரரை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும்.

மீனராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் சூரியனால் அவசரமாக எதையும் செய்யத் தோன்றும். தனாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் பணவரவு கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாகப் பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறமையால் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பார்கள்.

குடும்பத்தில்அமைதி உண்டு. வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனை அளிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பெண்களுக்கு, எதிர்ப்புகள் அகலும். கலைத் துறையினருக்கு, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். மாணவர்களுக்கு, கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்,வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 3, 6.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரவு கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்