வார ராசிபலன்கள் 19-03-2020 முதல் 25-03-2020 வரை (மேஷம் முதல் கன்னி வரை) 

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தில் தெம்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகச் சிரத்தை தேவை. குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. கலைத் துறையினருக்கு, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கலாம். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: முருகனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் உங்களது கருத்துகளுக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகம் தொடர்பில் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு, புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறும் நம்பிக்கை அதிகரிக்கும். கவலை நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு வெள்ளை மொச்சைச் சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்யப் பணத் தட்டுப்பாடு நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் கஷ்டமான சூழ்நிலையிலும் நிதானமாக முடிவெடுப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மதிப்பும் மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்படச் செய்து பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு, சாதுரியமான பேச்சால் சிக்கலான பிரச்சினைகளையும் தீர்த்துவிடுவீர்கள். கலைத் துறையினருக்கு, தொழிலில் சிக்கல்கள் தீரும். பகைவர்கள் பணிந்து போவார்கள். அரசியல்வாதிகளுக்கு, விடாப்பிடியாகச் செயல்பட்டுச் சில வேலைகளை முடிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் அடைவதற்குப் பாடுபடுவீர்கள். கல்விப் பயணம் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாளை மரிக்கொழுந்து அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லாத் துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் செவ்வாய் பார்க்கிறார். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் கவலை மறையும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நிதானமாகச் செயல்படுவீர்கள். சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். சகோதர சகோதரிகளிடம் பிணக்குகள் மறையும்.

வாழ்க்கைத் துணைக்காகச் செலவு செய்ய நேரிடும். பெண்களுக்கு, சேமிக்கும் எண்ணம் ஏற்படும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கலைத் துறையினருக்கு, பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். மாணவர்களுக்கு, பாடங்களை மிகவும் நிதானமாகப் படித்து மனத்தில் பதியவைத்துக் கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: பராசக்திக்கு வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வருவது காரியத் தடையை நீக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தித் தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்தி தரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும். குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து நன்மதிப்பைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பெண்களுக்கு, புத்துணர்வுடன் செயல்பட்டுக் காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, சில அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணத்தட்டுப்பாட்டைச் சந்திக்கலாம். அரசியல்வாதிகளுக்கு, எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாகப் பேசிப் பழகுவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் தொய்வு நிலை நீங்கும். ராசியைப் பார்க்கும் சூரியன் எல்லாக் காரியங்களிலும் அனுகூலத்தைத் தருவார். எதையும் துணிச்சலாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழியில் நிலவிய சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். கூடவே ஒருவிதச் சஞ்சலமும் இருந்து வரும். வங்கிக்கடன் தொடர்பில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு, தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, பொறுப்பேற்கும் பணிகளில் கவனம் அவசியம். வெளிநாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, நீண்டநாள் பிரச்சினைகள் மறையும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். சகமாணவர்களுடன் போட்டி மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: புதன்கிழமையன்று விஷ்ணு சகஸ்ரநாமம் படித்துப் பெருமாளை வழிபடக் காரிய வெற்றி உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்