மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் பாதசார சஞ்சாரத்தால் மனதிடம் அதிகரிக்கும். பணவரவு இருந்தபோதிலும், சுபச்செலவும் வந்துசேரும். தொழில், வியாபாரம் அமைதியாக இருக்கும். பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது, அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
கணவன் மனைவிக்குள் சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, வேறெந்தக் கவலையுமின்றிப் பாடங்களைச் சிரத்தையுடன் படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்குவது எல்லா நன்மை தரும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் அயன சயன போக விரய ஸ்தானத்தில் இருக்கிறார். தனாதிபதி புதனின் பாக்கிய ஸ்தான சஞ்சாரத்தால் பணவரவு திருப்தி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக பிறரிடம் ஆலோசனையிலோ விவாதத்திலோ ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில், அலுவலகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். வாக்கு ஸ்தானத்தைச் செவ்வாய் பார்க்கிறார்.
உறவினர்கள், நண்பர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பத்தில் பரஸ்பரம் பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பெண்களுக்கு, ஏற்றம் ஏற்படும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்துசேரும். அரசியல்வாதிகளுக்கு, சிறிய வேலையும் செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க செல்வங்கள் சேரும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனால், ராசியைச் செவ்வாய், குரு, சனி ஆகியோர் பார்க்கிறார்கள். கூடுதல் முயற்சியால் லாபம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப் பெறுவார்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். குடும்ப ஸ்தானத்தைச் செவ்வாய் பார்க்கிறார்.
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு, எதையும் திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு, தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்வீர்கள். மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: வியாழக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் செவ்வாய், புதன் இருவரும் பார்க்கிறார்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வேகம் பிடிக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லாப் பணிகளையும் திறம்படச் செய்து முடிப்பார்கள். எதிர்பார்த்த அதிகாரமிக்கப் பதவிகளைப் பெறுவார்கள்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு, காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, கடின உழைப்பால் வெற்றி வாகை சூடலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். மாணவர்களுக்கு, படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்குப் பாடுபடுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 6, 9.
பரிகாரம்: அம்மனைத் தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனக் குழப்பம் நீங்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை ராசிநாதன் சூரியன், குரு இருவரும் பார்க்கிறார்கள். காரியங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். முயற்சிகளில் நல்ல பலன் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைவான லாபம் வரும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகளின் சொல்படி நடந்துகொள்ள வேண்டும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.
சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்குள் எதையும் திட்டமிட்டுக்கொண்டு செய்வது நன்மை தரும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். பெண்களுக்கு, எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு, திறமைக்கேற்ற புகழும் கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, சங்கடங்கள் குறையத் தொடங்கும். மாணவர்களுக்கு, எதிர்காலக் கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். நீங்கள் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும். பணவரவு வழக்கத்தைவிட அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும்.
கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துச் செல்வதால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்கும். கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். மாணவர்களுக்கு, கல்விக்கான செலவு கூடும். சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதால் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: துளசியைப் பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago