வார ராசிபலன்கள் 05-03-2020 முதல் 11-03-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்ப்புகள் அகலும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பிறகு காரியம் கைகூடும். குடும்பத்தில் வீண் பிரச்சினை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம்.

பெண்களுக்கு, எதிர்ப்புகள் விலகும். கலைத் துறையினருக்கு, புகழைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அரசியல்வாதிகளுக்கு, நெருங்கிய நண்பர்களால் நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு, சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாகப் பேச வேண்டும். கல்வியில் வெற்றிபெறுவதற்குக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானைத் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பலவகையான யோகத்தைத் தரும். துணிச்சல் அதிகரிக்கும். உங்கள்மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். அச்சுத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் சந்தோஷமும் மனநிம்மதியும் நிலவும்.

பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேச வேண்டும். பெண்களுக்கு, துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். மாணவர்களுக்கு, போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய், குரு-சனியுடன் பயணிக்கிறார். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரம் வேகமாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, கவனமாகப் பணிகளைக் கவனிக்க வேண்டும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையைத் தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பெண்களுக்கு, பணவரவு அதிகமாகும். கலைத் துறையினருக்கு, உங்கள் திறமையால் புகழைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பெயரும் புகழும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: குலதெய்வத்தை வியாழக்கிழமையன்று வணங்கிவர மன அமைதி உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் பாக்கியாதிபதி புதன் இருக்கிறார். உங்களுக்குப் பிறரின் உதவிகள் கிடைக்கும். மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில், வியாபாரப் பயணங்களால் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் செயல்திறன் வெளிப்படும். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருக்கிறார். சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன் மனைவிக்குள் சுமுகமான உறவு காணப்படும்.

பெண்களுக்கு, எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்குச் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சூரியன் இருக்கிறார். அரசு சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகள் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று விழிப்புடன் இருங்கள். உத்தியோகத்தில் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தைச் செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் கருத்து வேற்றுமை நீங்கும்.

வீண் வாக்குவாதங்கள் அகலும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துச் செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பிலான கவலை வேண்டாம். கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நீலம், மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: சனிக்கிழமை எள் சோறு வைத்து சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்யகஷ்டங்கள் குறையும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் செவ்வாய் பார்க்கிறார். பொது வாழ்க்கையில் புகழ்பெறுவீர்கள். சொத்துகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் நிதானமாக இருந்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். மனைவி, குழந்தைகளுக்கு ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.

கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்கள். பெண்களுக்கு, ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு, கட்சி மேலிடத்தில் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: நவக்கிரகங்களைத் தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தைப் போக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்