ஜென் துளிகள்: நான் விழிப்பு!

By செய்திப்பிரிவு

புத்தர் ஞானம் அடைந்தபிறகு, சாலையில் ஒருவரைக் கடந்துசென்றார். அந்த மனிதர், புத்தரின் அசாதாரணமான ஒளி, அமைதியான இருப்பால் தாக்கத்து உட்பட்டார். அவர் புத்தரிடம், “நண்பரே, நீங்கள் யார்? வானுலகைச் சேர்ந்தவரா அல்லது கடவுளா?” என்று கேட்டார்.

“இல்லை,” என்றார் புத்தர். “அப்படியென்றால், நீங்கள் மந்திரவாதியா அல்லது சூனியக்காரரா? ” என்று கேட்டார் அவர்.

மீண்டும் புத்தர், “இல்லை” என்று பதிலளித்தார். “நீங்கள் ஒரு மனிதரா?” என்று கேட்டார் அவர். “இல்லை” என்றார் புத்தர். “பிறகு நீங்கள் யார்தான், நண்பரே?” என்று கேட்டார் அவர். “நான் விழிப்பு” என்று பதிலளித்தார் புத்தர்.

அமைதி என்னும் ஞானம்

புத்தரிடம் ஒரு தத்துவ அறிஞர் கேட்டார்: “சொல் இல்லாமல், சொல்லின்மை இல்லாமல் உங்களால் உண்மையைக் கூற முடியுமா?” புத்தர் அமைதியாக இருந்தார். தத்துவ அறிஞர் வணங்கி, புத்தருக்கு நன்றி தெரிவித்தார்: “உங்கள் அன்பின் கருணையால் மாயைகளிலிருந்து விடுபட்டு உண்மையின் பாதைக்குள் நுழைந்திருக்கிறேன்”. அந்த அறிஞர் சென்றவுடன், ஆனந்தன் புத்தரிடம் அவர் எதை அடைந்தார் என்று கேட்டார். “ஒரு நல்ல குதிரை சாட்டையின் நிழலில்கூட ஓடுகிறது” என்று பதிலளித்தார் புத்தர்.

எனக்குப் பிடித்த வானிலை

பயணி: “இன்றைய வானிலை எப்படி இருக்கும்?” மேய்ப்பவர்: “நான் விரும்பும்படி இருக்கும்.”பயணி: “நீங்கள் விரும்பும் வானிலையாகத்தான் அது இருக்கும் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

மேய்ப்பவர்: ஐயா, நான் விரும்புவது எப்போதும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்டதால், எப்போதும் எனக்குக் கிடைப்பதை விரும்பக் கற்றுக்கொண்டேன். அதனால், நான் விரும்பும் வானிலைதான் இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.”

மகிழ்ச்சி

ஒருநாள் சுவாங் சு, தன் நண்பருடன் நதிக்கரையோரத்தில் நடந்துசென்று கொண்டிருந்தார். “நீந்தி கொண்டிருக்கும் அந்த மீன்களைப் பார். அவை எத்தனை மகிழ்ச்சியுடன் இருக்கின்றன,” என்றார் சுவாங் சு. “நீங்கள் மீன் அல்ல. அப்படியிருக்கும்போது அவை மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பது உங்களுக்கு உண்மையாகத் தெரிவதற்கு வாய்ப்பில்லை,” என்றார் நண்பர்.

“நீங்கள் நானல்ல. அப்படியிருக்கும்போது மீன்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பது எனக்குத் தெரியாது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் சுவாங் ட்சு.

- கனி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்