‘பிரசாட்’ என்றால் கோபுரம். ‘கிரவ்வன்’ என்றால் ஏலக்காய். இந்தக் கோயில் கட்டப்பட்ட இடத்தில் ஏலக்காய் செடிகள் இருந்ததால் இந்தக் கோயில் ‘பிரசாட் கிரவ்வன்’ என்று அழைக்கப்படுகிறது.
அங்கோர் வாட் கோயிலில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலை வெளியே இருந்து பார்க்கும்போது, எந்த அலங்கார வேலைப்பாடும் இல்லாத 5 கோபுரங்கள் மட்டுமே நின்று கொண்டு இருப்பது தெரியும்.
ஆனால் கோயிலின் உள்ளே, அரிய சிற்பங்கள் மறைந்து கிடக்கின்றன. கி.பி. 921-ம் ஆண்டு இந்தக் கோயிலில் விஷ்ணு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
வடக்கு - தெற்காக ஒரே வரிசையில் காணப்படும் 5 கோபுரங்களும் கம்போடியாவில் செங்கல் கட்டுமானத் திறன், மிக உச்சத்தில் இருந்த காலத்தை அடையாளப்படுத்துகின்றன.
கோயிலுக்குள் இருக்கும் அனைத்துச் சிற்பங்களும் செங்கல் சுவர் மீது செதுக்கப்பட்டவை ஆகும்.
கருங்கல்லில் செதுக்குவதற்கு ஈடான தரத்தில், செங்கல் சுவர்கள் மீது பிரமாண்டச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருப்பதும் அவை 1,100 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் அதே அழகுடன் காட்சி அளிப்பதும் வியக்க வைக்கின்றன.
கம்போடியாவில் இந்தக் கோயிலில் மட்டுமே செங்கல் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் ஹர்ஷவர்மன் காலத்தில், அவரது அமைச்சரவையில் இருந்த முக்கிய அதிகாரியான மகிந்திரவர்மன் என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார்.
கோயில் சுவர்களின் கட்டுமானத்தில், செங்கல்களுக்கு இடையே சாந்துப்பூச்சு ஏதும் இல்லை. சில தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒருவிதமான பசை கொண்டு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மத்திய வடக்கு கோபுரங்களில் உள்ள புடைப்புச் சிற்பங்கள் மட்டும் நிறைவடைந்த நிலையில் உள்ளன. மற்ற கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் பணி முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.
புடைப்புச் சிற்பங்களில் பிரமாண்ட அளவில் உள்ள விஷ்ணு, லட்சுமி ஆகியோரின் சிற்பங்கள் மனதைக் கவர்கின்றன என்றால், வாமன அவதாரத்தைக் காட்டும் ஒரு சிற்பம் நம்மை வியப்பின் உச்சிக்குக் கொண்டுசென்று விடுகிறது.
கல்லிலே கலைவண்ணம்:
அதிசயக் கோவில்
அங்கோர் வாட்
அமுதன்
தினத்தந்தி பதிப்பகம்
விலை : ரூ. 150/-
தொடர்புக்கு : 044- 25303336
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago