துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு ஏழாமிடத்துக்கு மாற்றம் பெறுகிறார். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலை தூக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். பெண்களுக்கு, அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். கலைத் துறையினருக்கு தொழில், வாக்கு வன்மையால் எல்லாம் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகள் நிதானமாகப் பேச வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் நன்மைகள் கிடைக்கும். காரியத்தடை, தாமதம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகச் செயலாற்றுவார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு, தடைகள் விலகும். கலைத் துறையினருக்கு மனதைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, சந்தோஷமான மனநிலை காணப்படும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் கவலை விலகும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கையால் தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான பணிகள் கூட எளிமையாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை மறையும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்கு, விருப்பங்கள் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு, சனி சஞ்சாரத்தால் காரியத்தடை, தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: முருகனை வணங்கிவரக் கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் பாக்கியாதிபதி புதனின் சஞ்சாரம் பல விதத்திலும் நன்மைகளை அள்ளித் தரும். காரியங்களில் இருந்த தாமதமான போக்கு மாறும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்புவதிலும் பாதுகாத்து வைப்பதிலும் எச்சரிக்கை அவசியம். வராதிருந்த கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். செய்யும் வேலை பற்றி அதிருப்தி உணர்வு இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள். பெண்களுக்கு, வீடு, மனை இனங்களில் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, இழுபறி நிலை மாறி மனம்மகிழும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு, பதவிகள் பற்றிய புதிய தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையைப் போக்கும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் சூரியன் இருக்கிறார். விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரவு இருப்பினும் தேவை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நினைத்ததைச் சாதிப்பார்கள். சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நீடிக்கும். பெண்களுக்கு, மனதைரியம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாகப் பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: பெருமாளைத் தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்துக்கு மாற்றம் பெறுகிறார். ராசியை செவ்வாய் பார்க்கிறார். எதிலும் சுணங்கிக் கிடந்த காரியங்கள் நன்மையாக நடைபெறும். தொழில், வியாபாரத்தில் பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த வர்த்தக ஆர்டர்கள் வந்து சேரும். குடும்பத்தில் சச்சரவு குறைந்து நிம்மதி அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். விருப்பமான நபரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் குரு மூன்று கிரகங்களுடன் அலங்கரிக்கிறார். பெண்களுக்கு, கோபத்தை குறைப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, பணிகளில் சகஜநிலை காணப்படும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். துயரங்கள் தீரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago