மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணியால் செல்வச் சேர்க்கை உண்டாகும். கவலைகள் மறையும். செயல் வேகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கும். கணவன் மனைவிக்குள் மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் பயனுள்ள உரையாடல் நடக்கும். வீடு, மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார். பெண்களுக்கு, செல்வச் சேர்க்கை உண்டாகும். கலைத் துறையினருக்கு, எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகிப்போய் விடுவார்கள். முயற்சிகளுக்குச் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்
எண்கள்: 5, 7, 9
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டிக் கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். . எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். மனநிம்மதி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பயணங்களிலும் வாகனத்தைப் பயன்படுத்தும் போதும் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்குள் அன்பு நீடிக்கும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு, பிறர் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து காரிய வெற்றியை அடைவார்கள். கலைத் துறையினருக்கு, போட்டிகள் அகலும். வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு, காரியத்தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலைக் குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: மாரியம்மனைப் பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். ராசியைச் செவ்வாய் - குரு - சனி பார்க்கிறார்கள். வாக்குவன்மையால் எந்தக் காரியத்தையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். பெண்களுக்கு, சாமர்த்தியமான பேச்சால் காரிய வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, இழுபறியாக இருந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தீவிர ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப் பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: சிவபுராணம் படித்துவர காரியத்தடை நீங்கும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பில் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறன் பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியத் தடை அகலும். குடும்ப ஸ்தானத்தைப் புதன், குரு பார்க்கிறார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, பொறுப்புடன் நீங்கள் செய்யும் வேலைகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியான காரியம் சாதகமாக முடியும். அரசியல்வாதிகளுக்கு, எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம்கூடச் சற்றுத் தாமதமாகலாம். மாணவர்களுக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லாப் பிரச்சினைகளும் தீரும். தடைகள் நீங்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைப் புதன், குரு பார்க்கிறார்கள். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மீளும். வீண்செலவு குறையும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் புத்தி சாதுரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணை வழியில் வருவாய் இருக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உறவினர்களுடன் மன வருத்தம் நீங்கும். பெண்களுக்கு, நண்பர்களுடன் மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு, வெளியூர்ப் பயணமும் அலைச்சலும் உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, உதவிகள் செய்யும்போது நன்கு ஆலோசித்துச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, கல்விப் பயணம் செல்லலாம். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: நரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் சுக்கிரன், சனி பார்க்கிறார்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு உண்டாகும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பெண்களுக்கு, உங்களது முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கலைத் துறையினருக்கு, எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டும். நிபுணர்களை ஆலோசிக்காமல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். சூரியன் சஞ்சாரத்தால் அரசியல்வாதிகளுக்கு மனதைரியம் உண்டாகும். பெற்றோர் வகையில் ஆதரவு உண்டு. மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளைப் பூஜிக்க எல்லாத் தடைகளும் நீங்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago