வார ராசி பலன் 13-02-2020 முதல் 19-02-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் உச்சமாக இருக்கிறார். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டுக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு, தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். கலைத் துறையினருக்கு, வீண் ஆசைகள் தோன்றும். கட்டுப்பாடு அவசியம். அரசியல்வாதிகளுக்கு, காரியங்களில் தடை அகலும். திட்டமிட்டுச் செய்தால் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வி முயற்சிகளில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தன, வாக்கு ஸ்தானத்தில் குரு - சனி - கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். எந்தப் பணியையும் ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் முரண்பட்ட விஷயங்களில் சமாதானம் ஏற்படும். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்களுக்கு, எந்தவொரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, வேலைகள் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு, தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: பழனி முருகனை வணங்கி வர குடும்பப் பிரச்சினை தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். தொழில், வியாபாரம் மிதமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகள் கடினமாகும். பேச்சுத் திறமையால் மேலிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். பதிலுக்குப் பதில் பேச வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் மன வருத்தம் ஏற்படலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு, உங்களது காரியங்களுக்குப் பக்கபலமாக குடும்பத்தினர் இருப்பார்கள். கலைத் துறையினருக்கு, நட்பு வகையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: பைரவரை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் சூரியன் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு மாறுகிறார். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு முன்னேற்றம் காண்பார்கள். கணவன் மனைவிக்குள் சகஜநிலை நீடிக்கும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கு. பெண்களுக்கு, பயணங்களின் போதும் வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, நல்லது கெட்டது பற்றிய கவலையின்றி எதையும் செய்வதற்கு முற்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேறத் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் புதனுடன் சூரியனும் இணைகிறார். எல்லாக் காரியங்களும் சுமுகமாக நடந்து முடியும். துணிச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மனநிறைவைத் தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு, அனைத்து வேலைகளிலும் வேகம் காட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு, அடுத்தவரிடம் உங்கள் செயல்திட்டங்களைப் பற்றிக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடம் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு, எதிர்காலக் கல்வி குறித்த எண்ணம் மேலோங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி வழிபடக் காரிய வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் உச்ச சுக்கிரனால் நன்மைகள் நடக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். குடும்பத்தினருக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு, கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, நீண்ட நாள் பகை தீரும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் குறித்த தீவிரமான முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜித்து வணங்கிவர எல்லாத் தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்