மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் பாக்கியஸ்தானத்துக்கு மாற்றம் பெறுகிறார். நன்மையான பலன்களைப் பெறப் போகிறீர்கள். பூமி, வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழில், வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டுச் சரியாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பொறுப்புகளைக் கவனத்துடன் செய்ய வேண்டும். இயந்திரங்களோடு பணிபுரிபவர்கள், உலோகப் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் முரண்பாடு வேண்டாம். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு, கோபம், படபடப்பு குறையும். கலைத் துறையினருக்கு, மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, சுபச்செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு, உயர்கல்வியில் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களால் செலவு உண்டாகும்
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென் மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துர்க்கை அம்மனை வணங்க நன்மைகள் உண்டாகும். அலைச்சல் குறையும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருக்கிறார். கோபமான பேச்சு, படபடப்பு குறையும். காரியத் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பரபரப்பு நீங்கி அமைதி திரும்பும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சமாதானம் வரும். பிள்ளைகள் கல்விக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
பெண்களுக்கு, எடுத்த காரியத்தை முடிக்கும் மனஉறுதி உண்டாகும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நெடுநாட்களாக வராதிருந்த ஊதியத் தொகை கைக்குக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர், நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனைப் பூஜிக்க மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். எடுத்த காரியம் முடியவில்லையே என்ற படபடப்பு இருக்கும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல், வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் வேகம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
கணவன் மனைவிக்குள் வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் ஏற்படலாம். விலையுயர்ந்த பொருட்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு, எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கலைத் துறையினருக்கு, அதிர்ஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு, பாடங்களைத் திட்டமிட்டுப் படிப்பது தொடர்பில் படபடப்பு உண்டாகும். காரியத் தடை, தாமதம் உண்டாகலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: ரங்கமன்னாரை வணங்கிவர எல்லாப் பிரச்சினைகளும் தீரும். செல்வச் செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் தனது சஞ்சாரத்தினால் நல்ல பலன்களை அள்ளித் தருவார். மனவருத்தம் நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அலட்சியப் போக்கு வேண்டாம்.
குடும்பத் தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு வரலாம். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளை களை அவர்களின் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பதவி வாய்ப்பு உண்டு. விட்டுப்போன சொந்தங்கள் உதவுவார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையைத் தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை வழங்கும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால், நல்ல பலனைத் தரும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் ஆறாம் இடத்தில் மறைவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தாலும் குருவின் பார்வையால் சுப பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாகச் செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சி னைகள் உருவாகலாம்.
பிள்ளைகளுக்காகக் கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு, மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைத்துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு, தேவையற்ற விஷயங்களில் கவனத்தைச் சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: அருணாசலேஸ்வரரை வணங்கி வரத் துன்பங்கள் விலகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் மறைந்திருந்தாலும் மற்ற கிரகங் களின் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பணவரவில் திருப்தி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்களுக்கு, எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பணப்புழக்கம் திருப்திதரும். கலைத் துறையினருக்கு, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கிவர எதிர்ப்புகள் நீங்கும். தொழில் போட்டிகள் குறையும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago