வார ராசி பலன் 06-02-2020 முதல் 12-02-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் உச்சமான நிலையில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு அனுகூலமாக அனைத்துக் காரியங்களும் நடக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல், வர்த்தக ஆர்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் வேலைப்பளு உண்டாகலாம். வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்ல நேரலாம். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கும்.

பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியப் பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம்பக்கத்தவரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு, எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். கலைத் துறையினர் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் சீரான போக்கு காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6 பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்பப் பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தன்வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு மாற்றம் அடைகிறார். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தொழில், வியாபாரம் தொடர்பில் நிதானமான போக்கு காணப்படும். போட்டிகள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் கவனமாகப் பணிகளைச் செய்ய வேண்டும். எதிர்பாராத இடமாற்றமும் உத்தியோக மாற்றமும் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும்.


கணவன் மனைவிக்குள் திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாகப் பேச வேண்டும். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கலைத் துறையினருக்கு, மனத்தில் கவலை அகலும். அரசியல்வாதிகளுக்கு, பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வி கற்கும் முயற்சி வெற்றி பெறும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிக்குச் செவ்வாய் மாறுகிறார். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் தடங்கல் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் கொடுக்கப்பட்ட பணிகளைச் சரியாகச் முடிக்க வேண்டுமென்ற கவலை உண்டாகும். வழக்கு, விவகாரங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும்.

நிர்பந்தமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. பெண்களுக்கு, தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் அதனால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு, தேவையான உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, பணவரவு திருப்தி தரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானுக்கு முல்லை மலர் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு ஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதன் இருப்பதால் பணவரவு சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு செயல்படுங்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.

இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றைக் கையாளும்போது கவனம் தேவை. பெண்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, அடுத்தவரைப் பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சுகளைத் தவிர்த்துக் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர், நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்தி அர்ச்சனை செய்துவரக் கஷ்டங்கள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் பஞ்சமாதிபதி புதன் இருப்பது அனைத்து வகையிலும் நன்மைகளைக் கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த வர்த்தக ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் பகைமையும் பிரச்சினைகளும் நீங்கும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு ஏற்படும். விருந்துகள், கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு, எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்குப் பொருளாதார ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, உறவினர்களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை எண்கள்: 2, 6
பரிகாரம்: வியாழக்கிழமையன்று ஆஞ்சநேயரை வெண்ணெய் சாத்தி வணங்கி தீபம் ஏற்றிவர எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிக்குப் பத்தாமிடத்தில் செவ்வாய் மாறுகிறார். ராசியில் சுக்கிரன் உச்சமாகச் சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பில் வீண் அலைச்சல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலுவலக நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தினரின் செயல்பாடுகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு, கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு, முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள் வீண் செலவைத் தடுக்கத் திட்டமிடுவது நல்லது. மாணவர்களுக்கு, சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்