மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. ராசியைக் குரு பார்க்கிறார். மனக்கவலை குறையும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி அனுசரித்துச்செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச்செல்லுங்கள். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் மேலித்தில் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரை பித்தம் சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: குலதெய்வத்தைப் பூஜித்து வணங்க குடும்பப் பிரச்சினை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்துக்கு மாறி உச்சநிலையை அடைகிறார். நன்மைகள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டிகள் குறையும். மனத்தில் சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில், திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். பெண்களுக்கு, புத்திசாதுரியம் அதிகரிக்கும். நீண்டகாலமாகக் காத்திருந்த வெளிநாட்டு வேலைக்கான உத்தரவு வரலாம். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதர உறவுகள் சரியான நேரத்தில் கைகொடுக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: மகாலட்சுமியைப் பூஜிக்க பணப்பிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். ராசியை செவ்வாய், குரு, சனி பார்க்கிறார்கள். உங்கள் அணுகுமுறையில் நிதானம் இருக்கும். சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பக்தியில் நாட்டம் அதிகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். கணவன் மனைவிக்குள் சிறுசிறு சங்கடங்கள் இருக்கும். பெண்களுக்கு, யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம். கலைத் துறையினருக்கு, பணவரவு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, தடைகள் அகலும். மாணவர்களுக்கு, கவனத்துடன் பாடங்களைப் படிப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியே உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: கல்யாணக் கோலத்தில் இருக்கும் வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் சூரியன் பார்க்கிறார். பாக்கியஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரன் பல அதிர்ஷ்டங்களைக் கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகப் பணிகளைக் கவனிப்பீர்கள். அலுவலக வேலைகளில் தாமதம் அகலும். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். பெண்களுக்கு, தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். கலைத் துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சூழல் வரும். அரசியல்வாதிகளுக்கு, ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பப் பிரச்சினைகள் தீரும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் மறைந்திருந்தாலும் அவரின் பாதசாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய மிகப் பெரிய செயலைச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும்.
நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்களுக்கு, எந்தத் தடையையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, மனமகிழ்ச்சி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உடல்சூடு ஏற்படலாம், கவனம் தேவை.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: ஈஸ்வரனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லாத் தொல்லைகளும் நீங்கும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் ரண ருண ரோக ஸ்தானத்துக்கு மாறுகிறார். ராசியைச் சுக்கிரன் - சனி பார்க்கிறார்கள். சொத்துகள் தொடர்பில் ஆவணங்களை முறையாகக் கவனித்து வாங்க வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபோல நடந்துகொள்ள வேண்டும். நிலுவைப் பணம் வரும். பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. நேரத்துக்கு உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். பெண்களுக்கு, வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் வாதத்திறமை வெளிப்படும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, வெள்ளை l
எண்கள்: 5, 6
பரிகாரம்: ஸ்ரீ ரங்கநாதரை வணங்கி வரக் காரியத் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago