துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காகச் சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும். கலைத் துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். பெண்களுக்கு, கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்குப் பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் தனம், வாக்கு ஸ்தானம் வலுவாக இருக்கும். பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களிலும் மனநிறைவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. வாகனங்களால் செலவும் ஏற்படும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு, பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் தடைநீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 2, 4, 9
பரிகாரம்: முருகனுக்கு பூஜை செய்வது, கஷ்டங்களைப் போக்கி மனநிம்மதியைத் தரும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். கிரகச் சேர்க்கைகள் எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, கௌரவம் உயரும். பெண்களுக்கு, காரியங்களை துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டு. மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெறத் துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை
எண்கள்: 1, 3, 5
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதைரியம் அதிகரிக்கும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் அஷ்டமாதிபதி சூரியன் இருப்பதால் எதையும் யோசித்து நிதானமாகச் செய்ய வேண்டும். தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார். எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதைத் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு, நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு, நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, அவசரம் காட்டாமல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லாத் துன்பங்களும் நீங்கும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிக்கிறார்கள். ராசிநாதன் சனி பார்வையுடன் தைரிய, தொழில் அதிபதி செவ்வாய் பார்வை பெறுவதால் இந்த அருமையான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அறிவுத் திறமை கூடும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்துக்குக் குறைவு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதுரியம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு, சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நன்மைகள் நடக்கும். அரசியல்வாதிகள் வாகனங்கள் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மாணவர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை
எண்கள்: 6, 9
பரிகாரம்: பைரவரை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். ராசிநாதன் பார்வையால் அனைத்துவிதமான நலன்களையும் பெறப் போகிறீர்கள். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். செலவுகள் கூடும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும். குடும்பத்தில் மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விருந்தினர் வருகை இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, உகந்த காலகட்டமிது. பெண்களுக்கு, பயணங்கள் செல்ல நேரிடலாம். அரசியல்வாதிகள் எந்த வேலையைச் செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் பாடங்களைப் படிக்க வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: தினம்தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago