மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் மறைந்திருந்தாலும் அவரின் சஞ்சாரத்தால் எண்ணிய காரியங்களைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் பலத்தால் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது முழுத்திறனை வெளிப்படுத்துவார்கள்.
கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு, சில முக்கியமான, காரியங்களைக் கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு மனதைரியம் அதிகரிக்கும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். அரசியல்வாதிகளுக்கு மனக்கவலை குறையும். எல்லா வகையிலும் சாதகமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடையக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 6, 9
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலைத் தவிர்க்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் செயல்களுக்குப் பாராட்டு கிடைக்கும். எதிலும் தயக்கமோ பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். பூர்விகச் சொத்துக்கள் மூலம் வருமானம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புதுமையைச் செயல்படுத்துவீர்கள்.
அரசாங்க உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டு. புண்ணிய ஸ்தலங்களுக்கும், குலதெய்வக் கோயிலுக்கும் செல்வீர்கள். பெண்களுக்கு, எதிலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். கலைத் துறையினருக்கு, அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொண்டுவரும். அரசியல்வாதிகளுக்கு, வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் தடங்கல் இன்றி நன்றாகப் படிப்பீர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 1, 5, 6
பரிகாரம்: மகாலட்சுமியை பூஜை செய்து வழிபடப் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் இருக்கிறது. நீண்ட நாள் கவலைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்த்து அனுசரித்துப் பேசவேண்டும். குடும்பத்தில் அமைதி ஏற்படக் குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் வேண்டும்.
பெண்களுக்கு, அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். கலைத் துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, உங்கள் புத்திக் கூர்மை உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டுச் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு, உயர்கல்வி பற்றிய எண்ணம் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண்பெறப் படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்
திசைகள்: கிழக்கு, மேற்கு
நிறங்கள்: சிவப்பு, பச்சை
எண்கள்: 1, 5, 7, 9
பரிகாரம்: சனிக்கிழமையன்று பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் பஞ்சமஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் செவ்வாயால் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலைச் சுமை இருக்கும்.
உத்தியோகத்தில் மிகுந்த கவனத்துடன் எதையும் செய்ய வேண்டும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் விவாதங்கள் தோன்றி மறையும். ஒரு நல்லக் குறிக்கோளுக்காகப் புண்ணிய பயணம் செய்வீர்கள். பெண்களுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாகக் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு,வெள்ளி
திசைகள்: கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: சிவன் கோயிலுக்குப் போய் சிவன், அம்பாளை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மனக்குழப்பத்தை நீக்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் அனைத்து கிரகங்களின் சஞ்சாரத்தால் வீண் அலைச்சல், காரியத் தடை அகலும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையைத் தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் ஏற்படலாம்; முடிவில் எல்லாம் சுபமாகும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி, ஏற்படும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு, உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்குவதால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன், சுக்கிரன் சாரம் பெற்று சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழிலில் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். ஆனால், அவர்களிடம் திறமையாகப் பேசித் தக்கவைத்துக் கொள்ளுங்கள். வியாபாரம், தொழிலில் புதிய திட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் பொருளாதாரரீதியான முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழிலில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு, கடன் பிரச்சினைகள் குறையும். தந்தைவழியில் உதவி உண்டு. கலைத் துறையினருக்கு, பிரச்சினைகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். மனத்துக்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு, வீண் விவாதங்களைத் தவிர்த்துக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது முன்னேற்றம் தரும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5, 9
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago