வார ராசி பலன் 09-01-2020 முதல் 15-01-2020 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்களில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருக்க வேண்டும். மனைவி, குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு, சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய உத்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, முன்னேற்றம் கிடைக்கும். மேன்மையை அடைவதற்கான புதிய வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு, கல்வியைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களைப் படிக்கும்போது மனத்தை ஒருமுகப்படுத்திப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, நீலம்
எண்கள்: 4, 6, 9
பரிகாரம்: சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய், ராசியில் ஆட்சியாக சஞ்சாரம் செய்கிறார். தொழில், வியாபாரத்தில் புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். நிலம் தொடர்பில் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணைக்குத் தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். தனாதிபதி குருவின் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். பெண்களுக்கு, திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத் துறையினர் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, மேற்கு
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை
எண்கள்: 3, 6, 9
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியால் எதிர்பார்த்த காரியங்கள் மனத்துக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் செலவைச் சமாளிக்கத் தேவையான பண உதவியும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவும்போது கவனம் தேவை. கலைத் துறையினர் உற்சாகமாக வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்கள் பெறுவார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு பயன் பெறுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, வடக்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லாப் பிரச்சினைகளும் தீரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் அறிவுத் திறன் பளிச்சிடும். இனிமையான பேச்சால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தால் செல்வம் சேரும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு, அறிவுத் திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சால் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினர் அதீத, கவனத்துடன் செயல்படுவது உங்களுக்குப் பதவி உயர்வு, வெற்றியைத் தேடித்தரும். அரசியல்வாதிகளுக்கு, லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு, திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: விநாயகப் பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் செவ்வாய், சனிப் பார்க்கிறார்கள். எல்லாக் காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். தொழில், வியாபாரத்தில் செலவு அதிகரிக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டுப் பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். கலைத் துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வீண் செலவு உண்டாகும். மாணவர்களுக்கு, கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, மேற்கு
நிறங்கள்: வெள்ளை, பச்சை
எண்கள்: 5, 6, 9
பரிகாரம்: சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் துணிச்சல் உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடக் கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் பயணங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு, எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு, குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 3, 5, 7
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லாக் காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்