ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: மேஷம்

By செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை, தட்சிணாயனம், ஹேமந்த ருதுவில், வளர்பிறையில், சஷ்டி திதியில், மேல்நோக்கு கொண்ட சதய நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்னத்தில், வியதீபாதம் நாமயோகம், தைத்துலம் நாமகரணம் நேத்திரம், ஜுவனம் நிறைந்த மந்தயோகம் நன்னாளில், நள்ளிரவு மணி 12.00க்கு 01.01.2020-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி ராகுவின் ஆதிக்கத்தில் (2+0+2+0=4) இந்த ஆண்டு பிறப்பதால் மக்களிடையே ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்கும் குணம் அதிகரிக்கும்.

லக்னாதிபதியும், வித்யாகாரகனுமான புதன் சனியுடன் சேர்ந்திருப்பதால் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், பாகப்பிரிவினையில் பாதிப்படையும். இன்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறையும். மாணவர்களிடையே பாலியல் விழிப்புணர்வு அதிகரிக்கும். மாணவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விளையாட்டு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கல்வி நிறுவனங்களில் தரப்படும்.

சனி பகவான் கும்பம் ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் மக்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் ஈடுபடுவார்கள். பரம்பரைத் தொழிலில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் சண்டைபோடும் குணம் அதிகமாகும். எஞ்சியிருக்கும் கூட்டுக் குடும்பங்களும் பிரியும். வாகனங்களின் விலை குறையும். வதந்திகள் வேகமாகப் பரவும். மக்கள் உண்மையைத் தாமதமாகப் புரிந்துகொள்வார்கள். உலகெங்கும் போராட்டங்கள் அதிகரிக்கும்.

ஆண்டு பிறக்கும்போது லக்கினத்துக்கு மூன்றில் செவ்வாய் நிற்பதால் ராணுவம், காவல் துறை நவீனமாகும். நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கடல், நதி ஓரக்கரைகள் தூய்மைப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறை விரிவடையும். ஆண்டு பிறக்கும்போது தனுசு ராசியில் 5 கிரகங்கள் இருப்பதால் ஆன்மிகக் கூடங்கள், நிறுவனங்களை நடத்துபவர்கள் அவதிக்குள்ளாவார்கள்.

சனியும் கேதுவும் சேர்ந்து நிற்பதால் மின்கசிவால் பாதிப்புகள் ஏற்படும். குருபகவானுடன் நான்கு கிரகங்கள் சேர்ந்தி ருப்பதாலும், குருவுக்குப் பன்னிரண்டில் செவ்வாய் நிற்பதாலும் ரூபாய் நோட்டில் மாற்றங்கள் வரும். புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும். தனக்காரகன் கேதுவுடன் நிற்பதனால் பொருளாதார மந்த நிலை மேலும் நீடிக்கும்.
இந்த 2020 மக்களிடையே சிக்கனத் தையும், புதிய பாதையில் பயணிக்கும் தைரியத்தையும் உருவாக்கும்.

மேஷ ராசி வாசகர்களே

எதிலும் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்று நினைப்ப வர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வருவாய் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கவுரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் நீங்கும்.

பங்குவர்த்தகம், கமிஷன் வகைகளால் பணம் வரும். தம்பியுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி, சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் போன்ற விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

26.12.2020 வரையுமே சனிபகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடுகட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர் புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் சுய ரூபத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப இனிச் செயல்படுவீர்கள். வெளி வட்டா ரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

1.1.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பல முறை முயன்றும் முடிக்க முடியாத வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தொழிலதிபர்கள், நாடாள்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வராது என்று நினைத்த தொகை கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும்.

உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். புறநகர் பகுதியிலாவது அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினால் பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அவர்வழி உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் சிறுசிறு அவமானங்கள், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்று அச்சப்படுவீர்கள். சட்டத்துக்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயல்வார்கள். வருடம் பிறக்கும் போது 3-ம் வீட்டில் ராகு நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்விகச் சொத்தைச் சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். 9-ம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். செப்டம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும்.

திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். 25.10.2020 முதல் 17.11.2020 வரை உள்ள காலகட்டத்திலே சுக்ரன் 6-ம் வீட்டிலே சென்று மறைவதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல், வாகன விபத்து, தங்க ஆபரணங்கள் தொலைந்து போதல் போன்றவை நிகழக்கூடும். கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் திடீர் லாபம் அதிகரிக்கும். கடையை நவீனமயமாக்குவீர்கள். விளம்பர உத்திகளைச் சரியாகக் கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. இந்தப் புத்தாண்டு விரக்தி யின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்

அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். தயிர் சோற்றைத் தானமாகக் கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்