ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: சிம்மம்

By செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

சிம்ம ராசி வாசகர்களே

எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் மன இறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பொது விழாக்கள், கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

26.12.2020 வரை சனிபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து நிறைவேற்றப் பாருங்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.2020 வரை குருபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த தொடர் யுத்தமெல்லாம் விலகும். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனிக் கட்டுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவுக்குப் பணம் வரும்.

குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மகளுக்கு வெகுநாட்களாகத் தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்பொழுது முடியும். வேலையில்லாதவர்களுக்குக் கைநிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் கூடும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள்.

ஆனால், நவம்பர் 13-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, படபடப்பு, விரயம், விரக்தி, ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் என வந்து நீங்கும். வருடம் பிறக்கும் போது உங்கள் ராசிக்கு கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஒற்றைத் தலை வலி, ரத்த சோகை, மூட்டு வலி வரக்கூடும். தாய்மாமன், அத்தை வகையில் செலவுகள் வந்து போகும். பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்காதீர்கள்.

ராகு 11-ம் வீட்டில் தொடர்வதால் பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழிபிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேதுவும், 10-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெருங்கிய உறவினர், நண்பரை இழக்க நேரிடும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

20.06.2020 முதல் 15.08.2020 வரை மற்றும் 26.10.2020 முதல் 12.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் செவ்வாய் 8-ல் சென்று மறைவதால் பணத்தட்டுப்பாடு, ஏமாற்றங்கள், சகோதர சகோதரியுடன் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும். 1.1.2020 முதல் 08.1.2020 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். இந்த 2020-ம் ஆண்டின் பிற்பகுதி சவாலானதாகவும், மையப்பகுதி ஓரளவு வளர்ச்சியையும், முற்பகுதி அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

நவக்கிரகத்திலுள்ள குருபகவானிடம் வியாழக்கிழமைகளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். வேர்க்கடலை தானமாகக் கொடுங்கள். வேண்டியது நடக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்