ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
தனுசு ராசி வாசகர்களே
அஅழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வாதாடுபவர்களே! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த 2020-ம் ஆண்டு பிறப்பதால் துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.
வருடம் பிறக்கும் போது ராசிக்குள் கேது நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள்.
நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7-ம் வீட்டில் ராகு நிற்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். உங்கள் இருவருக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயல்வார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு மனைவி, மனைவிவழி உறவினர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும்,
12-ல் கேதுவும் நுழைவதால் மனோதைரியம் கூடும். பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். இளைய சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நாடாள்பவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் நண்பராவார்கள்.
1.1.2020 முதல் 12.11.2020 வரை குரு ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்பட்டுக்கொள்வீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாகச் செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதைத் தட்டி வைக்கப் பாருங்கள். நீங்கள் மதிக்கும் பெரியவர்களைப் பார்த்து உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒற்றைத் தலை வலி, சுவாசக் கோளாறு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு, கால்சியம் சத்துக் குறைவு என வரக்கூடும். நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நீரிழிவு, ரத்த அழுத்தம் இருப்பின் முறையான பரிசோதனைகளைச் செய்து அதற்கேற்ப மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
தினசரி யோகா, தியானம் செய்வது நல்லது. குற்றம் குறை பார்த்தால் சுற்றம் ஏதும் இல்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விருந்துகளைத் தவிர்க்கப் பாருங்கள். தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளைத் தவிர விழாக்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது நல்லது. பாதை மாறிச் செல்பவர்களின் நட்பைத் தவிர்த்து விடுங்கள். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். கடுமையாகப் பேசாமல் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.
பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒத்துக்கித்தள்ளுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை, வருங்காலம் குறித்த பயமெல்லாம் விலகும். பிள்ளைகளை நீங்கள் எதிர்பார்த்த நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளியூர்ப் பயணங்களால் ஆதாயமுண்டு. 26.12.2020 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். பொது உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வறுத்த, பொரித்த அசைவ உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். நாக்கைக் கொஞ்சம் கட்டுங்கள். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்துகொண்டாலும் சிலர் உங்களைக் குறை கூறுவார்கள். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரண்டி கையெழுத்திட வேண்டாம்.
28.3.2020 முதல் 14.5.2020 வரை மற்றும் 1.6.2020 மதல் 27.7.2020 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் பேச்சால் பிரச்சினைகளும் வரக்கூடும். மற்றவர்கள் வீட்டு விஷயங்களில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் நியாயமாகவும், யதார்த்தமாகவும் பேசினாலும் சிலர் நீங்கள் ஒருசார்பாகப் பேசுவதாக குறை கூறுவார்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாகச் செயல்படுவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்சினை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சின்னச் சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளைப் படைக்கத் தூண்டும் வருடமிது.
பரிகாரம்
அருள்மிகு விநாயகப் பெருமானைத் தோப்புகரணமிட்டு தினமும் வணங்குங்கள். சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் அருகம்புல் தந்து பிரார்த்தனை செய்யுங்கள். மூக்குக்கடலை (கொண்டைக்கடலை) தானமாகக் கொடுங்கள். ஆரோக்கியம் பெருகி அலைச்சல் குறையும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago