வார ராசி பலன் 19-12-2019 முதல் 25-12-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் மிகப் பலமாக இருக்கிறார். தனஸ்தானத்தைப் பார்க்கிறார். பணவரவு அதிகமாகிப் பொருளாதாரம் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்லாமல் அனுசரித்துச் செல்லுங்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மேலிடத்தில் பரிவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, நண்பர்களிடையே சுமுக உறவு இருக்க விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு, சக மாணவர்களின் கருத்துகளோடு முரண்படாமல் இணைந்து படிப்பது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, நீலம்.
எண்கள்: 5, 7, 9.
பரிகாரம்: செவ்வாய்க் கிழமை முருகனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்ப்புகள் விலகும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றிபெறும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கலாம். குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம்.

பெண்களுக்கு, உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். கலைத் துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்துகொடுப்பீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களைப் படிக்க வேண்யிருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்நீலம்
எண்கள்: 2, 6
பரிகாரம்: வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியைத் தீபம் ஏற்றி வணங்க பொருளாதாரச் சிக்கல் தீரும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் சஞ்சாரம் நல்ல பலன்களைத் தரும். குழப்பங்கள் நீங்கி மனத்தில் தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தினரின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும்.

பெண்களுக்கு, குழப்பங்கள் நீங்கி மனத்தில் தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு, காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, வீண் வழக்கு, விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு, முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்துத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். வருவாய் கூடும். மனதிருப்தி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு, முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தின் பாராமுகம் குறித்த வருத்தம் வந்துபோகும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு, ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களில் சந்தேகங்களைத் தெளிந்து படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: திங்கள்கிழமையன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மன அமைதியைத் தரும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாகச் செயல்பட வேண்டும். ராசியாதிபதி சூரியனுடன் புதன், குரு, சனி, கேதுவுடன் இணைந்து பஞ்சம பூர்வ ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அகலும். குடும்பத்தில் கருத்து வேற்றுமை நீங்கும். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் அகலும்.

பெண்களுக்கு, விவேகமாகச் செயல்படுவது வெற்றியைத் தரும். கலைத் துறையினருக்கு, எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்களால் வீண் அலைச்சல் குறையும். அரசியல்வாதிகளுக்கு, நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு நடப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சிவன் கோயிலுக்குப் போய் சிவனையும் நவக்கிரகத்தில் சூரியனையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். தொழில் ஸ்தானத்தை சூரியன், ராசிநாதன் புதன், குரு, சனி, கேது என ஐந்து கிரகங்கள் பார்க்கிறார்கள். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு, சாதக பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, பேச்சுத் திறமையால் காரியங்களைச் சாதகமாகச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். மாணவர்களுக்கு, போட்டிகள் குறையும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: புதன்கிழமையன்று ஆஞ்சநேயரை வெண்ணைய் சாத்தி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்