வார ராசி பலன் 11-12-2019 முதல் 18-12-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு ஸ்தானத்தை சூரியன், ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார்கள். வாக்குவன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வர்த்தக ஆர்டர்களுக்கு தடை நீங்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். செயல் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பிள்ளைகள் ஆலோசனைகளைக் கேட்பார்கள். பெண்களுக்கு புத்திசாதுரியம் அதிகரிக்கும். கலைத் துறையினர் புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு, சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 2, 3, 9
பரிகாரம்: மகா கணபதியை பூஜித்து வர நன்மை உண்டாகும். காரியத் தடைகள் நீங்கும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி புதன், தனஸ்தானத்தைப் பார்க்கிறார். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் அரசுப் பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கும் ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவைப் பணம் கிடைக்கும். குடும்பத்தினருக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். கலைத் துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு, தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். பழைய நட்பால் காரியங்களைச் சாதிப்பீர்கள். மாணவர்களுக்கு, மனத்தை ஒருமுகப்படுத்திப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 6
பரிகாரம்: அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் சப்தமஸ்தானம் மிக வலுவாக இருப்பதால் காரியங்கள் கைகூடும். ராசியாதிபதி புதன் மனக்கவலையைப் போக்கி நிம்மதியைத் தருவார். அரசு தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுப்பதால் நன்மைகள் விளையும். பெண்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். கலைத் துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் ஊழியர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் முயற்சிகளைச் செய்வீர்கள். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை வெண்ணெய் இட்டு வணங்க மனதைரியம் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்துக்கு மாறாகக் காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பில் தடைகள் நீங்கும். திட்டமிட்டுச் செய்வதால் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்ல வேண்டும். ஆன்மிக எண்ணங்கள் உண்டாகும். உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்ய வேண்டும். கலைத் துறையினருக்கு துணிச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். நற்பெயர் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறத் திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கிவர நன்மைகள் நடக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்திலிருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். கடன்கள், நோய்கள் தீரும். திருமண முயற்சிகள் பலனளிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலிடத்தில் கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நிலவிய மோதல்கள் நீங்கும். உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். பெண்களுக்கு நட்புவட்டத்தில் நிதானம் தேவை. கலைத் துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு, பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: ருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையன்று வணங்கிவர எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன், குரு வீட்டில் பயணம் செய்வதால் புத்தி சாதுரியம், அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அவசரமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பேச்சாற்றலால் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். நிதானம் தேவை. குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களிடம் பழைய பகைகள் மாறும். பெண்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு துணிச்சல் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெளிர்பச்சை, வெள்ளை
எண்கள்: 5, 6
பரிகாரம்: துர்க்கை அம்மனை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்