துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் தடைபட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறன் வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்துக்குச் சில பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் சூரியன் இருக்கிறார். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களிலும் மனநிறைவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. குடும்பத்தினருடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, நற்பலன்கள் வந்து சேரும். கலைத் துறையினருக்கு, கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் கவனம் தேவை. மாணவர்களுக்கு, கல்வியில் தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு
எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களைப் போக்கி நிம்மதியைத் தரும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் ஐந்து கிரகங்கள் கூட்டணியாகச் சஞ்சரிப்பதால் நன்மையே உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பெண்களுக்கு, காரியங்களைத் துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, கௌரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு தீவிர முயற்சிகளால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். கல்வி, விளையாட்டு தொடர்பில் வெகுதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி அர்ச்சனை செய்து வணங்க முன்னேற்றம் உண்டாகும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுங்கள். அதுவே காரிய வெற்றிக்கு உதவும். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்ல வேண்டும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம். குடும்பத்தில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்க்க வேண்டும். நிதானம் காரிய வெற்றிக்கு உதவும். கலைத் துறையினருக்கு, நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, நற்பெயர் எடுக்கும் சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் வேண்டாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை சனி பார்க்கிறார். இனிமையான பேச்சால் வெற்றி காண்பீர்கள். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்துக்குக் குறைவு இருக்காது. உத்தியோகத்தில், தன் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் எதையும் மனம்விட்டுப் பேசிச் செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகக் கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்களுக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். கலைத் துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு, நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். மாணவர்களுக்கு, எதிர்காலம் குறித்த எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை. மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: வாராகி தேவியை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் சுகஸ்தானமும் தொழில் ஸ்தானமும் மிக வலுவாக இருக்கிறது. சுக்கிரன் சஞ்சாரத்தால் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தை ராசிநாதனே அலங்கரிப்பது சிறப்பு. தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமான லாபம் தரும். குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் குடும்பத்தில் மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு, வழக்கத்தை விடக்கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகளுக்கு, நன்மை-தீமை எனப் பலன்கள் கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 9
பரிகாரம்: தினம்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசித்து வாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago