வார ராசி பலன் 28-11-2019 முதல் 04-12-2019 வரை (துலாம் முதல் மீனம்) 

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய் இருக்கிறார். தனவாக்கு ஸ்தானமும் தைரிய வீரிய ஸ்தானமும் வலிமையாக இருக்கிறது. தொழில், வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் சொல்படி கேட்டு நல்லபெயர் பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் பிரச்சினை எதுவானாலும் மனம்விட்டுப் பேசுங்கள்.

பெண்களுக்கு, மனத்தில் குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். கலைத் துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசிப் பொழுதை கழிப்பீர்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு, பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 2, 6

பரிகாரம்: சுக்கிரபகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்துவர செல்வம் சேரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். ராசியாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் மனதைரியம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதார முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையையும் கூடுதல் முயற்சியால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணியிட மாற்றம், பதவி உயர்வு தேடி வரும்.

சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு, எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு கூடுதலாக நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: சிவப்பு

எண்கள்: 1, 5, 9

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து செவ்வாய் பகவானுக்குத் தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசி மிகவும் பலமாக இருக்கிறது. வாக்கு வன்மையால் எதையும் சாதகமாகச் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதுரியமான பேச்சால் லாபம் காண்பீர்கள். வர்த்தகத் திறன் அதிகரிக்கும். பணவரவும் திருப்திகரமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமையால் முன்னேற்றமடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளிடம் கனிவுடன் பேச வேண்டும்.

பெண்களுக்கு, துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. பழைய நட்பால் காரியங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். எதிர்பாராத சந்திப்பின் மூலம் நீண்டநாள் பிரச்சினையைத் தீர்ப்பீர்கள். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: சிவபெருமானை தினமும் 11 முறை வலம் வந்து வணங்கிவரக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணக்கஷ்டம் குறையும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனியின் சஞ்சாரத்தால் தொல்லைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதனால் சாதகம் உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல், இழுபறியைச் சந்திப்பீர்கள். பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுங்கள். குடும்பம் தொடர்பில் கவலை, பிள்ளைகள் தொடர்பான சங்கடங்கள் இருக்கும்.

கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, தொல்லைகள் குறையும். கலைத் துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தால் நன்மைகள் கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். மாணவர்களுக்கு, கல்வியில் மெத்தனப் போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

எண்கள்: 2, 6

பரிகாரம்: மாற்றுத் திறனாளி களுக்கு உதவிகள் செய்வதும், சிவ வழிபாடும் வீண் விரயங்களைக் குறைக்கும்.


கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் இனிமையான பேச்சால் அனைத்துக் காரியங்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். ராசியில் செவ்வாய் சஞ்சாரம் இருப்பதால் திடீர் கோபம் வரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஊழியர்களிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் திறமையாகச் செயல்பட்டுப் பாராட்டுகளைப் பெறு வீர்கள். கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும்.

பெண்களுக்கு முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு லாபங்கள் பெருகும். கடன் சுமையும் குறையும். அரசியல்வாதிகள் செயல்களைச் செம்மையாகச் செய்வீர்கள். அற்புதமான பலன்கள் கிட்டும். பிரிந்து சென்ற உறவினரைச் சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு, கோபத்தைக் குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை. மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: ஆஞ்சநேயக் கவசத்தை படித்து வருவதால் மனக்குழப்பங்கள் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் மனமகிழும் சம்பவங்கள் நடக்கலாம். ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். தொழில், வியாபாரத்தில் எல்லாம் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் திறமையாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் சாதித்துக் கொள்வீர்கள்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சுபச் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு செலவினங்கள் குறையும். அரசியல்வாதிகளுக்கு உயர்வு ஏற்படும். தைரியம் கூடும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 9

பரிகாரம்: வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்