வார ராசி பலன் 28-11-2019 முதல் 04-12-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி செவ்வாய் நேரடியாக ராசியைப் பார்ப்பதால் சமாளிக்கும் திறன் உண்டாகும். அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். உத்தியோகத்தில் நிதானம் வெற்றியை உண்டாக்கும். அலுவலகத்தில் கருத்து வேற்றுமை அகலும். குடும்பஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் கவலைகள் மறையும்.

ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பிறரிடமிருந்த மனஸ்தாபம் நீங்கும். மாணவர்களுக்கு, கல்வியில் போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் செய்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு

எண்கள்: 1, 3

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க பிரச்சினைகள் குறையும்.


ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் அஷ்டமஸ்தானத்தில் இருந்தாலும் தனது பலத்தால் நன்மைகளைத் தருவார். ராசியாதிபதி சுக்கிரனுடன் குரு பகவான் இணைந்து சம்பந்தம் பெறுவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். கொள்கைக்காகப் பாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர் தேவையறிந்து செயல்பட வேண்டும். பணவரவு அதிகரிக்கும். அரசு உதவிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள், மேலதிகாரி களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகம் பேசுவதைத் தவிர்த்து செயலில் வேகம் காட்ட வேண்டும். கலைத் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். மாணவர்களுக்கு, ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தென்மேற்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 3, 6

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும்.


மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டுக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மனதைரியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதுரியமான பேச்சால் லாபம் இருக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும்.

குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு தைரியம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கலைத் துறையினருக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின்மீது அதிருப்தி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளைக் குறைத்து இருப்பதில் திருப்தி காணவேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, மஞ்சள்

எண்கள்: 2, 3, 5

பரிகாரம்: புதன்கிழமையன்று புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு, குடும்ப ஸ்தானம் வலிமையாக இருப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். தைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வேகமாக இல்லாவிட்டாலும் நிதானம் நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டும். மேலதிகாரிகளிடம் எதிர்க் கருத்துக்களை கூற வேண்டாம். குடும்பத்தில் பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேசுவது இணக்கத்தைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். விட்டு பிடியுங்கள். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு எவருக்கும் உதவிக்கரம் நீட்டத் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். மாணவர்களுக்கு, எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்துச் செய்ய வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை

எண்கள்: 2, 6

பரிகாரம்: அம்மனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களைப் போக்கும்.


சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்தில் பலமான நிலையில் சஞ்சரிக்கிறார். வீண் அலைச்சல் குறையும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இணக்கம் நிலவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எண்ணிய காரியம் கைகூடும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். அரசியல்வாதிகளுக்கு பகைவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெறும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், நீலம்

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் கோதுமை மாவை சர்க்கரை கலந்து வறுத்து காகத்துக்குப் படையுங்கள்.


கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் தைரிய ஸ்தானத்தில் இருக்கிறார். எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்தி இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பார்த்த வர்த்தக ஆர்டர்கள், சரக்குகள் வருவதில் தாமதம் உண்டாகலாம். மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு, உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு முடிவெடுங்கள். கலைத் துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு, திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து ஈடுபடுவது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு

எண்கள்: 3, 5, 9

பரிகாரம்: புதன்கிழமை பெருமாளை வணங்கி ஒன்பது ஏழைகளுக்கு புளி சாதம் அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்