வார ராசி பலன் 21-11-2019 முதல் 26-11-2019 வரை (துலாம் முதல் கன்னி மீனம்)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூரியனுடன் சஞ்சரிக்கிறார். ராசியில் செவ்வாய் - புதன் சஞ்சரிக்கிறார்கள். மனத்தில் உறுதி பிறக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். மேலிடம் சொல்வதை அப்படியே செய்யவேண்டும். சக பணியாளர்களிடம் மேலிடம் பற்றிப் புகார் சொல்ல வேண்டாம். குடும்ப ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் இருக்கிறார்.

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளுக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு செலவு அதிகாரிக்கும். கலைத் துறையினருக்கு வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். மாணவர்களுக்கு, கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி l திசைகள்: தென் கிழக்கு, வடக்கு நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் எண்கள்: 4, 6, 9 பரிகாரம்: செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமையன்று மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சூரியன், சுக்கிரன் இருக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய், புதனுடன் விரயஸ்தானத்தில் இருக்கிறார். தீ, ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி சூரியனே ராசியில் இருப்பதால் உயர்வு உண்டு. தொழில், வியாபாரத்தில் இடர்ப்பாடுகள் அகலும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

உத்தியோகத்தில் வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் தொடர்பில் கவலை நீங்கும். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தால் காரியங்கள் சாதகமாகும். மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி l திசைகள்: தென் மேற்கு, மேற்கு l நிறங்கள்: மஞ்சள், சிவப்பு l எண்கள்: 6, 8, 9 l பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும்.


தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் குரு, சனி, கேது கிரகக் கூட்டணி உள்ளது. தன்னம்பிக்கை வளரும். வாய்க்கு ருசியான விருந்து கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். இனிமையான பேச்சால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பதவி தேடிவரும். குடும்பத்தில் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு, திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். மாணவர் களுக்கு, கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென் மேற்கு நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு l எண்கள்: 2, 3, 6 l பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சனி விரயஸ்தானத்தில் குரு, கேதுவுடன் சஞ்சரிக்கிறார். சுபச்செலவு ஏற்படும். தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் நன்மையே அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லாபம் அதிகமாகும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உடையும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சம்பவங்கள் நடக்கலாம்.

கணவன் மனைவிக்குள் மன வருத்தம் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்யுங்கள். கலைத் துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: : திங்கள், வெள்ளி l திசைகள்: மேற்கு, வடக்கு l நிறங்கள்: கருநீலம், சிவப்பு l எண்கள்: 1, 5, 6 l பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும்.


கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை ராசிநாதன் சனி பார்க்கிறார். அனைத்துக் கிரகங்களும் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளைச் சந்திக்கலாம். உத்தியோகத்தில் பணிகள் கடினமாகும். வேறு வேலைக்குப் போகலாமா என்றுகூடத் தோன்றலாம். மனம்தளர வேண்டாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விச் செலவு அதிகரிக்கும். அவர்களுக்குத் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள்.

புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்பு தானாக அமையும். பெண்களுக்கு, அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. கலைத் துறையினருக்கு வேலைகளில் இருந்த சிக்கல்கள் அகலும். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது அவசியம்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: கிழக்கு, தெற்கு l நிறங்கள்: கரும் பச்சை, நீலம் l எண்கள்: 6, 7, 9 l பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்துக் கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிப்பதால் சுபமாக எல்லாம் நடந்து முடியும். மனோதிடம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தைத் தரும். பெண்களுக்கு, துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டு செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி l திசைகள்: வடக்கு, தெற்கு l நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்சு l எண்கள்: 2, 3, 6 l பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்