மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை ராசிநாதன் செவ்வாய், புதன், குரு பார்க்கிறார்கள். நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். ராசிநாதன் செவ்வாயின் பார்வை இருப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் வர்த்தக ஆர்டர்களுக்கேற்ப பொருட்களை வழங்குவதில் வேகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு, பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தள்ளி போடுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை தீரும். அரசாங்கத்தால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு, கல்விச் செலவு உண்டாகும். நம்பிக்கை அதிகரிக்கும்.
l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி l திசைகள்: கிழக்கு, தெற்கு l நிறங்கள்: மஞ்சள், பச்சை l எண்கள்: 1, 5, 6 l பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை சூரியன், செவ்வாய், ராசிநாதன் சுக்கிரன் பார்க்கிறார்கள். காரியத் தடைகள் நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் புதன் சாரம் பெற்றிருப்பதால் சாமர்த்தியமான பேச்சு கைகொடுக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். மரியாதை உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்க முயற்சிகள் சாதகமாகும். பங்குதாரர்களுடன் சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு, திறமையான பேச்சினால் சாதகமான பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பழைய தொழில் நண்பர்களின் சந்திப்பு லாபகரமாகும். அரசியல்வாதிகளுக்கு காரிய வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள்.
l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி l திசைகள்: மேற்கு, வட கிழக்கு l நிறங்கள்: சிவப்பு, பச்சை l எண்கள்: 2, 4, 5 l பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய பணவரவு இருக்கும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியை குரு, சனி பார்க்கிறார்கள். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதால் நன்மைகள் நிகழும் காலகட்டமாக அமையும். ராசியாதிபதி புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உல்லாசப் பயணம் போகலாம். வாகனங்கள் வாங்குவதில் தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாகும். தொழில் ஸ்தானாதிபதி குருவின் பார்வை இருப்பதால் குழப்பம் நீங்கித் தைரியம் உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி நம்பிக்கை உண்டாகும். கலைத் துறையினருக்கு துணிச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் இருக்கலாம். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படியுங்கள்.
l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: வடக்கு, தென் கிழக்கு l நிறங்கள்: பச்சை, வெள்ளை l எண்கள்: 3, 5, 8 l பரிகாரம்: பெருமாளை புதன்கிழமையன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணத்தால் நன்மை ஏற்படும். பெருமையும் அங்கீகாரமும் ஏற்படும். காரியத் தடைகளையும் கூடுதல் செலவையும் உண்டாக்கிய சூரியன் இந்த வாரம் பஞ்சமப் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். புத்திசாதுரியம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். சக பணியாளர்கள் கை கொடுப்பார்கள்.
குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். . பிள்ளைகளால் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு புத்தி சாதுரியம் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபத்தைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.
l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன் l திசைகள்: தெற்கு, வட மேற்கு l நிறங்கள்: வெண்மை, இளம்பச்சை l எண்கள்: 2, 4, 8, 9 l பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். சுபச்செலவு ஏற்படும். முயற்சிகளில் தடை அகலும். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினை உண்டாகலாம். வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தியான நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டியைச் சமாளிக்க முடியும். லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். உத்தியோகத்தில், கவனமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலிடத்திலிருந்து கனிவான செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும்.
எதிலும் சந்தோஷம் நிம்மதி நிலவும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சுணக்க நிலை நீங்கும். கலைத் துறையினருக்கு நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை நீங்கும்.
l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் l திசைகள்: வட கிழக்கு, மேற்கு l நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு l எண்கள்: 1, 9 l பரிகாரம்: சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன், செவ்வாயுடன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை சனி பார்க்கிறார். வீண் வாக்குவாதங்கள் அகலும். எதிலும் சிறிது முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். சுகஸ்தானம் வலு பெற்றிருப்பதால் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகள் அனைத்தும் விற்பனையாகும். குடும்பாதிபதி சுக்கிரன் மறைந்திருந்தாலும் அவர் தனது சாரபலத்தின் மூலம் பலம் பெறுகிறார்.
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் துளிர்க்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தினால் காரியங்கள் நடந்து முடியும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெறக் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் l திசைகள்: வட மேற்கு, கிழக்கு l நிறங்கள்: பச்சை, மஞ்சள் l எண்கள்: 5, 8, 9 l பரிகாரம்: துளசி அர்ப்பணித்து ஐயப்பனை அர்ச்சனை செய்து வணங்கிவர உடல் ஆரோக்கியம் மேம்படும்...
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago