வார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய், புதன், குரு பார்வையினால் யோகமான பலன்களைப் பெறுவீர்கள். வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். வீடு, வாகன யோகம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணத்தேவை ஏற்பட்டாலும் அதைத் திறமையாகச் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு காணப்படும். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அலட்சியம் காட்டாமல் செயல்படுங்கள்.

உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பெண்களுக்கு, தொல்லைகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு ஏற்றம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருக்கும் மனத்தாங்கல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6, 9
பரிகாரம்: ஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் அனுகூலமான நிலையில் இருக்கிறது. தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிப்பீர்கள். குருவால் பயணங்கள் ஏற்பட்டாலும் ஆதாயமும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கடன் விஷயங்களைச் சரியாக நிர்வகிக்க வேண்டும்.

உத்தியோகத்தில் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். சக ஊழியர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். கலைத் துறையினருக்கு பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் விருந்துகளில் கலந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்களின் ஆதரவால் சாதிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி
திசைகள்: மேற்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை
எண்கள்: 2, 6, 9
பரிகாரம்: திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் அதிர்ஷ்டமான முறையில் சஞ்சரிக்க, ராசியை குரு, சனி பார்க்கிறார்கள். எதிலும் சாதகமான பலனே கிடைக்கும். தனாதிபதி சந்திரனின் ராசி சஞ்சாரத்தால் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில், வியாபாரத்தில் தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு எடுத்த காரியத்தைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு வீண்செலவு, உடல்நல பாதிப்பு ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு நீடிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலை நீங்கும். படிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 3, 5
பரிகாரம்: லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் தொடங்கும்போது ராசிநாதன் சந்திரன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செல்லலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதியான செவ்வாயே பார்ப்பதால் தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் அனுசரித்துச் செல்வதால் அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகும். உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டுப் பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். கலைத் துறையினருக்கு முயற்சிகள் வெற்றிபெறும். வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு தேக்க நிலை மாறும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். முயற்சிகள் கைகொடுக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை
எண்கள்: 2, 5
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்பத்தில், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை விலகும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் சுகஸ்தானத்துக்கு மாறுகிறார். அது அவருக்கு யோக ஸ்தானமாகும். பாக்கியஸ்தானத்தை அதன் அதிபதி செவ்வாயே பார்க்கிறார். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் தீரும்.

தான தர்ம நடவடிக்கைகள், ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு தோன்றும். தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் சூரியனே பார்க்க இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் மந்தப்போக்கு நீங்கும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கவேண்டும். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். உறவினர்களிடம் பக்குவமாக பேச வேண்டும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத் துறையினருக்கு குழப்பம் நீங்கும். அரசியல்வாதிகளுக்குப் பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தெற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் நீங்கும். கவலை அகலும். விருப்பமின்றி வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். தொழில் ஸ்தானத்தை குரு, சனி பார்க்கிறார்கள். எதிர்பாராத சிக்கல்கள் சரியாகும். சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலை தொடர்பான நிச்சயமின்மை தோன்றும்.

குடும்பஸ்தானத்தை ராசிநாதன் புதனே அலங்கரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு, தேவையற்ற சில காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் அதனால் நன்மை உண்டாகும். கலைத் துறையினருக்கு இழுபறியான காரியங்களில் வெற்றி கிடைக்கும் அரசியல்வாதிகளுக்கு வீண் பழி நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்
திசைகள்: தெற்கு, தென் கிழக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
எண்கள்: 2, 3, 5
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்