வார ராசிபலன் 07-11-2019 முதல் 13-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தாலும் ராசியில் இருக்கக்கூடிய கிரகங்களின் கூட்டணியாலும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். பயணங்களால் லாபம் கிடைக்கப் பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் ஜெயம் உண்டு.

உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். பெண்களுக்கு, மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது துரிதமாகும். அரசியல்வாதிகளுக்கு, தேவையான பணஉதவி கிடைக்கலாம். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: நவக்கிரகங்களுக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்துக்கு மாறுகிறார். எதிர்பாராமல் சுபச்செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டு தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும் சகஜ நிலையும் காணப்படும்.

குழந்தைகளிடம் பேசும்போது, நிதானம் தேவை. பெண்களுக்கு, மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரவு தாமதப்படும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, நீண்டதூரத் தகவல்கள் நல்லவையாக இருக்கும். மாணவர்கள் சக மாணவர்களிடம் சகஜமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 4, 9.
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ மாலை சாத்தி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்துக்கு மாறுகிறார். எதிர்பாராமல் சுபச்செலவு உண்டாகும். தொழில், வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டு தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும் சகஜ நிலையும் காணப்படும்.

குழந்தைகளிடம் பேசும்போது, நிதானம் தேவை. பெண்களுக்கு, மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரவு தாமதப்படும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, நீண்டதூரத் தகவல்கள் நல்லவையாக இருக்கும். மாணவர்கள் சக மாணவர்களிடம் சகஜமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 2, 4, 9.
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ மாலை சாத்தி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் லாபஸ்தானம் வலுவாக இருப்பதால் வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் கூடுதல் வேலைச்சுமை இருக்கும். நல்ல பெயரும் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும்.

பெண்களுக்கு, வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத் துறையினருக்கு, வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். தொழில் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். மாணவர்கள் வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டு வர காரியத் தடைகள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் பாக்கியஸ்தானம் மிக வலுவாக இருப்பதால் வீண்கவலை நீங்கும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் பணத்தேவையைச் சரிக்கட்டத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாகக் கையாண்டு சமாளிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு, பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரவு மனமகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்கு, தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, வெள்ளை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று குலதெய்வ வழிபாடு செய்து வர வாழ்வில் ஏற்றம் ஏற்படும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் பலன் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாகப் பேச வேண்டும். பெண்களுக்கு, கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேச வேண்டும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத் துறையினருக்கு, போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதல் கவனத்துடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று நவக்கிரகங்களில் இருக்கும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்