வார ராசிபலன் 07-11-2019 முதல் 13-11-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ஏழாம் இடத்துக்கு மாறுகிறார். எதிலும் நன்மைகளே நடக்கும். திடீர்ப் பணத்தேவை உண்டாகலாம். வெளியூர் கடிதச் செய்திகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

கணவன் மனைவிக்குள் நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. பெண்களுக்கு, கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டு. கலைத் துறையினருக்கு, பகை நீங்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்கு, மனத்தில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். மாணவர்களுக்கு, ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபாரப் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு, திறமையாகச் சமாளித்து எந்தப் பிரச்சினையிலும் சாதகமான முடிவைப் பெறுவீர்கள். இழுபறியான காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். கலைத் துறையினருக்கு, தொழில் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, சக நண்பர்கள் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு, தேர்வுகள் குறித்த பயம் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: மகாலட்சுமியைப் பூஜை செய்து வழிபடத் தட்டுப்பாடு நீங்கும்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சந்திரன் சஞ்சாரத்தால் பொருள் வரவும் சேமிக்கும் எண்ணமும் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

குழந்தை பாக்கியம் ஏற்படும். பெண்களுக்கு, வீண் அலைச்சலும் செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு, சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். எதிர்ப்புகள் குறையும். மாணவர்களுக்கு, கல்வியில் போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 5.
பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை வணங்கி வர கடன் பிரச்சினை தீரும்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரனின் சஞ்சாரத்தால் எதிர்பாராத செலவு ஏற்படும். மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். தொழில் ஸ்தானமும் தொழில் ஸ்தானாதிபதியும் வலுவாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் எதையும் மனம்விட்டுப் பேசிச் செயல்பட வேண்டும்.

பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு, நண்பர்கள், உறவினர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் இறங்கும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். மாணவர்களுக்கு, பெரியோர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெள்ளை, நீலம்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: அம்மன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மனக் குழப்பத்தை நீக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் முயலும் காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்ப் பயணங்களால் நன்மை ஏற்படும். தொழில் ஸ்தானம் மிக வலுவாக இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் குறையும். பணவரவும் இருக்கும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள்.

பெண்களுக்கு, தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பணவரவு இருக்கும். கலைத் துறையினருக்கு, கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேச வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். அரசியல்வாதிகள் வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். ஊழியர்கள், கட்சிக்காரர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யுங்கள். மாணவர்களுக்கு, திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: சிவனை வணங்குவதால் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் தனவாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். விருப்பமானவர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். வாக்குவாதங்கள் வேண்டாம். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். மேல்படிப்புக்கான கடன் முயற்சிகள் வெற்றிதரும்.

பெண்களுக்கு, மனத்தில் பயம் நீங்கித் துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, குடும்பத்தினர் பேச்சைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கேற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கவனமாகப் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு உதவும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்