துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகச் சேர்க்கையாலும், ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தாலும் புத்திக் கூர்மையுடன் செயல்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்துச் செய்ய வேண்டும். உத்தியோகத்தில், எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரவு இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்களுக்கு, மனத்தடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு, நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினைகள் குறையும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு, சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசிப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர நோய் நீங்கும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய், புத்திகாரகனான புதன் வீட்டில் சஞ்சரிப்பதால் மதிநுட்பத்துடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பில் திட்டங்கள் மனத்தில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் செய்த பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்துக்காகக் கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். பெண்களுக்கு, எதையும் செய்து முடிக்கக் கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினர், சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தால் அழுத்தம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு
எண்கள்: 1, 5, 9
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை வழிபட எதிர்ப்புகள் அகலும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிக்கு ராசிநாதன் குரு வந்திருப்பதால் திட்டமிட்டுச் செய்யும் பயணங்கள் வெற்றிபெறும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாக்குவன்மையால் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்டநாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணங்கள் வாங்க நேரிடும்.
குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருவீர்கள். பெண்களுக்கு, புத்திக் கூர்மையுடன் செயல்பட்டுக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் கிட்டும். அரசியல்வாதிகள், எதையும் புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திச் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு, பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்துத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வருவது மன அமைதியைத் தரும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் லாபஸ்தானத்தில் யோகாதிபதி சுக்கிரன் அமர்ந்து அருள்வதால் தொட்ட காரியம் துலங்கும். செயல்திறன் மேலோங்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம், தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் நிலுவைப்பணம் கைக்குக் கிடைக்கும்.
பயணங்களால் லாபம் வரும். குடும்பத்தினரால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்குள் சமாதானம் காணப்படும். பெண்களுக்கு, மற்றவர்களின் ஆதரவுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். கலைத் துறையினருக்கு, வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு, கூடுதல் நேரம் ஒதுக்கிப் பாடங்களைப் படிப்பது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 6
பரிகாரம்: சனி பகவானைத் தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்கியம் பெறும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் இருக்கும் கிரகச் சேர்க்கையால் புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திக் காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும்.
உத்தியோகத்தில் சக பணியாளர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பின்னர் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். குடும்பத்தில் மருத்துவம் தொடர்பான செலவு ஏற்படலாம். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு, மனத்தில் தெளிவு உண்டாகும். பெற்றோர் வழியில் ஆதரவு இருக்கும். கலைத் துறையினருக்கு, பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு, புதிய வேலைகளைத் தொடங்க முடியும். மாணவர்களுக்கு, எதிலும் அவசரமில்லாமல் யோசித்து ஈடுபட வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை. மஞ்சள் எண்கள்: 3, 6
பரிகாரம்: மாரியம்மனைத் தீபம் ஏற்றி வழிபட எல்லாத் துன்பங்களும் நீங்கும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் எதையும் ஆராய்ந்து பார்த்துச் செய்வதற்கு முற்படுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். நண்பர்கள், உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு, எந்தவொரு செயலைச் செய்யும் முன்பும் நல்லது கெட்டதை ஆராய்ந்து ஈடுபட வேண்டும். கலைத் துறையினருக்கு, தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சல் உண்டாகலாம். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களுக்கு, கவனத் தடுமாற்றம் இல்லாமல் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 9
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago