ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
வாயால் பேசாமல் இதயத்திலிருந்து பேசுபவர்களே! இதுவரை உங்கள் சுகவீடான 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை எந்தச் சுகங்களையும் அனுபவிக்க முடியாமல் தடுத்ததுடன், பலவிதங்களிலும் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்த குருபகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை 5-ம் வீட்டில் அமர்ந்து அள்ளிக் கொடுக்கப் போகிறார். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பச் சூழ்நிலை அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்களே, இனி எதிலும் வெற்றி கிட்டும்.
வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். தாயாரின் மூட்டுவலி, முழங்கால் வலி விலகும். உறவினர்கள், நண்பர்கள் விட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட நாளாக புதுபிக்கப்படாமலிருந்த குலதெய்வக் கோயிலை சொந்தச் செலவில் புதுப்பிப்பதுடன், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதையோ இழந்ததைப் போலிருந்த முகம் மலரும்.
நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். வெளிநாட்டி லிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் எல்லாம் மறையும். வராமலிருந்த சொத்து கைக்கு வரும். குரு 11-வது
வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரி களுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப்புடவை, தங்க ஆபரணம் வாங்கித்தருவீர்கள். வீட்டுக்குத் தேவையான தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி வாங்கு வீர்கள்.
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் உணர்ச்சி வசப்படாமல் செயல்படுவது நல்லது. மஞ்சள் காமாலை, சோர்வு வந்து நீங்கும். வீண்பழி, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தின் மீது பற்றின்மை வந்து போகும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். சிறுசிறு விபத்துகளும், பணப்பற்றாக்குறை யும் வந்து போகும்.
பூரம், உத்திரம் 1-ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும். 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைவாகப் பேச வேண்டாம். வாகனம் அடிக்கடி பழுதாகி சரியாகும். இக்காலக்கட்டத்தில் மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிக்கும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் அமர்வதால் அடி வயிற்றில் வலி, மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, வேனல் கட்டி, வீண் பகை, மனஇறுக்கம் வந்துச் செல்லும். இக்காலக்கட்டத்தில் மகம், பூரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏமாற்றங்கள் குறையும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர் வதால் எதிர்ப்புகள் அதிகமாகும்.
வி.ஐ.பிகளுடன் பகைமை வந்து நீங்கும். 07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பொது விழாக்கள், 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். திருமணம் கூடி வரும். ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி சோகத்தி லிருந்து உங்களை விடுவிப்பதுடன், முதல் தரமான யோகங்களையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அமர்ந்துள்ள ஸ்ரீஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீநரசிம்மப் பெருமாளை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பாசிப்பருப்பை தானம் கொடுங்கள். செல்வ வளம் பெருகும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago