ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
மகர ராசி வாசகர்களே
எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசும் பண்பு கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் விரைய வீடான 12-ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளைச் சுருக்கப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்களுக்கு மத்தியில் நம் கௌரவம் என்னாவது என்று பெருமைக்காக கைக்காசை கரைக்காதீர்கள். குரு 12-ல் மறைவதால் எதிர்பாராத வகையில் முன்னேற்றமும் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சாதாரண விஷயத்துக்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள். அந்தரங்க விஷயங்களில், குடும்ப விவகாரங்களில் மூன்றாம் நபரின் தலையீடு வேண்டாம். யாரையும் நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரடியாகக் கவனிக்க வேண்டும். குரு பகவான் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் நிலுவைப் பணம் கைக்கு வந்து சேரும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். புறநகர்ப் பகுதியில் வாங்கியிருந்த மனையை விற்று பிரதான இடத்தில் வீடு வாங்குவீர்கள். பழைய சொந்தங்களெல்லாம் தேடி வரு்வார்கள். கூடாப் பழக்கங்கள் குறையும். பிள்ளைகளை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதுடன், நீங்களும் ஒருமுறை சென்று வருவீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். எதிரிகளால் ஆதாயமுமடைவீர்கள்.
வெளிவட்டாரத்தில் உதாசீனப்படுத்திய வர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசுர வளர்ச்சியடைவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். உங்களைக் கண்டும்காணமல் போய்க்கொண்டிருந்த உறவினர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியது வரும். வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரால் உதவியுண்டு. ஆனால் புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நீங்கள் நல்லதே சொன்னாலும் அதைத் தவறாக புரிந்துகொண்டு உங்களிடம் சண்டையிடுவார்கள். நேரம் தவறிச் சாப்பிடாதீர்கள். அல்சர், வயிற்றுக் கோளாறு வரக்கூடும். தள்ளிப் போன அரசு காரியங்கள் உடனே முடியும். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள், மற்றவர்கள் செய்த துரோகத்தை நினைத்து வருந்துவீர்கள். அண்டை வீட்டாரின் ஆதரவு உண்டு.
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவுக்குக் குறையிருக்காது. புகழ், கௌரவம் கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. முக்கியப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பூர்வீகச் சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், வீண் அலைச்சல், முன்கோபம், காரியத் தடைகள் வந்து செல்லும். வெளிவட்டார பழக்கங்களில் நிதானம் அவசியம். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வெளி உணவுகளைத் தவிர்க்கவேண்டும். ஒருவிதமான படபடப்பு, வீண் பிடிவாதம், தலைச்சுற்றல், வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். குடும்பத்திலும் பிரிவுகள் உண்டாகும். உடலில் சிறுசிறு கொழுப்புக் கட்டிகள் தோன்றி மறையும்.
07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனத்தை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ள வேண்டாம்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் மின்னணு, மின்சாரச் சாதனங்களை கவனமாக கையாளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவ்வப்போது அவர்களின் குறைகளைக் கண்டுபிடித்து வருத்தமடைவீர்கள். நிறைகளையும் பாராட்டத் தயங்காதீர்கள்.
வியாபாரத்தில் பலவகையில் கடன் வாங்கிப் புது முதலீடு செய்வீர்கள். லாபத்தைப் பெருக்க நவீன விளம்பர யுக்திகளைக் கையாள்வீர்கள். புதிய சலுகைகளையும் அறிமுகப்படுத்துவீர்கள். வாடிக்கை யாளர்களின் வருகை அதிகரிக்கும். ஆனால் வேலையாட்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். இடமாற்றம் உண்டு. இந்த குரு மாற்றம் திடீர்ச் செலவுகளையும், பயணங்களையும் தந்தாலும் பொது அறிவையும், புது அனுபவங்களையும் தந்து உயர்த்தும்.
பரிகாரம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து பட்டமங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். வெல்லத்தைத் தானமாக கொடுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago