குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மீன ராசி வாசகர்களே

By செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

29.10.2019 முதல் 13.11.2020 வரை

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.

ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.

சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.

மீன ராசி வாசகர்களே

எல்லோரையும் எளிதில் நம்பும் மனிதநேயம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்த குருபகவான் இப்போது 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டிற்குள்ளேயே அமர்வதால் எந்த வேலையிலும் தடுமாற்றம், இழுபறி நிலை உண்டாகும்.

வீண் விவாதங்கள், பகை வரக்கூடும். வர வேண்டிய பணம் வெகுநாட்களாகியும் வராமல் இருந்ததே, இனி வந்துசேரும். பழைய சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். முன்பிருந்ததை விட மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை விலகும். சேமித்து வைக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வரவேண்டிய பணமும் கைக்கு வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் என்பதை உணர்வீர்கள். உங்களின் சுக வீடான 4-ம் வீட்டை குரு பார்ப்பதால் எப்போதும் புலம்பித் தவித்துக் கொண்டிருந்த தாயாரின் மனம் மாறும். அவருக்கிருந்த கை, மூட்டு வலியெல்லாம் நீங்கும். தாய்வழிச் சொந்தபந்தங்களால் ஆதாயமுண்டு.

இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, நல்ல வீடு அமையும். சிலருக்கு வீடு கட்ட லோன் கிடைக்கும். கிரகப்பிரவேசம் செய்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கோவில் கும்பாபிஷேகம், சகோதரர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குரு பகவான் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். இழுபறியாகிக் கொண்டிருந்த சொத்துப் பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்கள் பலவீனங்களை யெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் வந்து போகும்.

வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர்ப் பயணங்களால் திணறுவீர்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். மனைவியைக் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சிறுநீரகத் தொற்று, ஒவ்வாமை வந்து போகும். உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.

28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11-வது வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். காணாமல் போன முக்கிய மான ஆவணங்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. சிறுநீரகத் தொற்று, காய்ச்சல் சளி தொந்தரவு வந்து நீங்கும். நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரங்களை அறிந்து சரக்குகளைக் கொள்முதல் செய்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங் கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். கடையை வேறிடத்துக்கு மாற்றியமைப்பீர்கள். அலுவலகத்தில் முன்பிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் செய்த தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியது வரும். இந்த குருமாற்றம் வாழ்க்கையில் முன்னேற நெளிவு சுளிவு தேவை என்பதை உணர்த்து வதாகவும், அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் அருகிலிருக்கும் ஸ்ரீசத்ய சாய்பாபா கோவிலுக்கு சென்று வணங்குங்கள். அன்னதானத்துக்கு உங்களால் முடிந்த பொருளுதவி கொடுத்து உதவுங்கள். நன்மை கிட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்