துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருக்கிறார். ராசிக்கு சூரியன் வருகிறார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியப் பேச்சால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பில் பயணங்களும் அலைச்சலும் இருக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு இருக்கும். போட்டிகள் மறையும். பெண்களுக்கு, முக்கியமான காரியங்களில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கலைத் துறையினருக்கு, கவனம் தேவை. எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பதில் எச்சரிக்கை அவசியம். அரசியல்வாதிகளுக்கு, அனைத்தும் சீராக நடக்கும். எதிர்பாராத சந்திப்புகள் லாபத்தைத் தரும். மாணவர்களுக்கு, கவனத்தைச் சிதறவிட வேண்டாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: கோளறு பதிகம் படிக்க வேண்டும். சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தாலும் ராசியில் இருக்கக்கூடிய குருவும் அனுகூலம் செய்கின்றனர். வீடு, மனை, வாகனம் தொடர்பில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பில் புதிய அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். பெண்களுக்கு, சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கூடும். காரியத் தடைகள் நீங்கும். கலைத் துறையினருக்கு, கிடைத்த வாய்ப்பைத் தவறவிட வேண்டாம். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, மூதலீடுகளைத் திருப்பி எடுப்பீர்கள். லாபத்தையும் அள்ளிக் குவிப்பீர்கள். மாணவர்களுக்கு, திறமையாகச் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: துர்க்கையை வழிபடுங்கள்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் பஞ்சமாதிபதி செவ்வாய் தனது நான்காம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால் எடுத்த முயற்சிகள் கைகூடும். எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றிப் பாராட்டுகளைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களைத் தேடி வரலாம். பெண்களுக்கு, தீர சிந்தித்த பிறகே வார்த்தைகளை வெளியிடுங்கள். கலைத் துறையினருக்கு, கிரகசூழ்நிலை சாதகமாக இருப்பதால் உழைப்புக்கேற்ற ஊதியம் வரும். அரசியல்வாதிகளுக்கு, மூலதனத்துக்குத் தேவையான பணம் வந்து குவியும். மாணவர்களுக்கு, படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 3, 5, 6.
பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்று.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் பணவரவு கூடும். வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலைச்சல், கூடுதல் செலவைச் சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு, எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். கலைத் துறையினருக்கு, கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினை தீரும். அரசியல்வாதிகளுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிக்கும்போது மனத்தை ஒரு முகப்படுத்தி படிப்பது நல்லது. கவனம் சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 2, 3, 5.
பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் பாக்கியஸ்தானம் வலுவாக இருப்பதால் பொன், பொருள் சேரும். ராசியைப் பார்க்கும் சனி பகவான் புதிய தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுத்த கடனைத் திருப்பி வாங்க முயல்வீர்கள். பெண்களுக்கு, வலியச் சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, சகஜநிலை காணப்படும். நண்பர்களால் நன்மை உண்டு. சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிகப் பயணம் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன்னர் தீர ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கு, வீண் அலைச்சலைத் தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்துக்கு உதவும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 5, 6, 9.
பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மை தரும். நவக்கிரகங்களை வலம் வாருங்கள்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் மிகப் பலமான கிரகச் சேர்க்கையால் பல வழியிலும் பணவரவு இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். பிறருக்கு உதவிகள் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கடும் முயற்சிக்குப் பிறகு முன்னேற்றம் அடைவார்கள். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். பெண்களுக்கு, வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம்தவறி உண்பதைத் தவிர்க்க வேண்டும். கலைத் துறையினருக்கு, சில அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவு செய்ய முடியாமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு, நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரவு கூடும். செயல்திறன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றிபெறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 3, 5, 7.
பரிகாரம்: காக்கைக்குத் தினமும் சோறு வைத்தல் நல்லது. தினமும் ராமர் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago