வார ராசிபலன் 17-10-2019 முதல் 23-10-2019 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By செய்திப்பிரிவு

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் தனாதிபதி சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் பணவரவு இருக்கும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுச் சரியாகும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும்.

பெண்களுக்கு, புதிய நட்பால் மகிழ்ச்சி கிடைக்கும். கலைத் துறையினருக்கு, எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிலும் கூடுதல் முனைப்புடன் உழைக்க வேண்டி இருக்கும். வெளியில் தங்க நேரலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: திருச்செந்தூர் செந்திலதிபனை நினையுங்கள். அனைத்துக் காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும்.

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ராகுவின் சஞ்சாரம் பெற்று சஞ்சரிப்பதால் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கியக் குறைவால் செலவு அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் சில்லறைச் சண்டைகள் உண்டாகலாம்.

புதிய கிளைகளைத் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவைப் பணம் வந்து சேரும். பெண்களுக்கு, எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம் இது. மாணவர்களுக்கு, படிப்பிலும் விளையாட்டிலும் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன், ராசியில் இருக்கும் ராகுவின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த தகவல்கள் வரும். உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் பிறர் குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்ல வேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் உதவி கிடைக்கும்.

பெண்களுக்கு, எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். உடனிருப்பவர்களிடம் எல்லாவற்றையும் பகிர வேண்டாம். கலைத் துறையினருக்கு, எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்.
திசைகள்: கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 5, 7, 9.
பரிகாரம்: பெருமாளைப் பூஜித்து வர நன்மையுண்டு. கோயில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள்.

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்களால் வருவாய் உண்டு. கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சு வேண்டாம்.

பணம் உத்திரவாதம் தரவேண்டாம். பெண்களுக்கு, கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். கலைத் துறையினருக்கு, எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதரர் வழியில் எதிர்பாராத உதவி வந்துசேரும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
திசைகள்: கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சூரியன் தைரிய வீரிய ஸ்தானத்துக்கு மாறுகிறார். நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் பேசும்போதும் பதில் சொல்லும்போதும் நிதானமாக இருத்தல் வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும்.

பெண்களுக்கு, திடீர் கோபம் உண்டாகலாம். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். கலைத் துறையினருக்கு, என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்துடன் கருத்துவேறுபாடுகள் வரலாம். அதிக வேலைப்பளு இருந்தாலும் எல்லாவற்றையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு, புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். கல்விக் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 1, 3, 6, 9.
பரிகாரம்: தினமும் சிவன் கோயிலுக்குச் சென்று, தீபமேற்றி வர நன்மைகள் நடக்கும்.

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் தெளிவான சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் ஆலோசித்து வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரப் பேச்சில் நிதானம் நன்மை தரும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

உத்தியோகத்தில் உங்களுக்கு வாகன யோகம் உண்டு. பெண்களுக்கு, புதிய தொடர்புகளால் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, கோரிக்கைகள் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் செலுத்திப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பச்சை, மஞ்சள்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: அய்யப்பனை வழிபடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்