தெய்வத்தின் குரல்: இறைவனின் அன்பு

By செய்திப்பிரிவு

சூரிய மண்டலம் எத்தனை பெரிது! அதைவிடப் பெரிய நட்சத்திர மண்டலங்கள் எத்தனையோ இருக்கின்றனவாம். இத்தனையையும் செய்த சுவாமி எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அத்தனை பெரியவர், குழந்தைகளான நம் பிரார்த்தனையையும் கேட்கிறார்! புழு பூச்சியிலிருந்து எல்லாவற்றுக்கும் இந்த உலகத்தில் அவற்றுக்குத் தேவைப்படுகிற ஆகாரத்தை அவர்தான் வைத்திருக்கிறார். அப்படியானால் அவர் இதயத்தில் எத்தனை அன்பு இருக்கவேண்டும்?

அன்பு இருப்பது மட்டுமல்ல. நாம் ஒழுங்கில்லாமல், தப்பும் தவறுமாகக் காரியம் செய்வது போலவா அவர் செய்கிறார்? அவரை ’ஏன்?’ என்று கேட்டுக் கண்டிப்பதற்கு அவருக்கு மேல் எவரும் இல்லாவிட்டாலும் அவர் எத்தனை ஒழுங்கோடு தினமும் இந்தப் பூமியை ஒரு முறை சுழலவிட்டுப் பகலையும் இரவையும் படைக்கிறார்? இதேபோல் இந்தப் பூமி சரியாக ஒரு வருஷத்தில் சூரியனைச் சுற்றி வரச் செய்து பலவிதமான பருவங்களை உண்டாக்குகிறார்! ஒவ்வொன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒழுங்கு செய்திருக்கிறார். நாமும் அவரைப் போல மனசில் அன்பாக இருக்க வேண்டும்; காரியத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக்குத் தான் தர்மம், அறம் என்று பெயர்.

சாதித்து விடலாம்

இந்த உலகம் முழுவதையும் நடத்துகிறவர் சுவாமி. இதில் மனிதர்கள் இருக்கிறோம். விலங்குகள் இருக்கின்றன. பட்சிகள் இருக்கின்றன. புழு பூச்சிகள் இருக்கின்றன. மரம், செடி, கொடி, புல், பூண்டு எல்லாம் கொண்ட ஒரு பெரிய குடும்பமே உலகம். அந்தக் குடும்பத்தை நடத்துகிறவர் சுவாமி.

நம்முடைய சிறிய குடும்பம் ஒவ்வொன்றையும் அம்மா, அப்பா என்ற இரண்டு பேர் நடத்துகிறார்கள். குடும்பம் நடப்பதற்குச் சாமான்கள் வேண்டியிருக்கின்றன. அவற்றை வாங்குவதற்குப் பணம் வேண்டியிருக்கிறது. அப்பா என்கிறவர் உத்தியோகம் செய்து, சம்பளமாகப் பணம் வாங்கிக்கொண்டு வருகிறார். அந்தப் பணத்தைக் கொண்டு சாமான்கள் வாங்கிப் போடுகிறார். இந்தச் சாமான்களை வைத்துக்கொண்டு அம்மா சமைத்துப் போடுகிறார்; மற்ற வீட்டுக் காரியங்களைச் செய்கிறாள்.

கடவுள் பெரியவர்

சுவாமி, மனிதர்களைவிட ரொம்பப் பெரியவர்; நம்மைவிட அவருக்குச் சக்தி ரொம்பவும் அதிகம். அதனால் அவருடைய உலகக் குடும்பத்தை நடத்துவதற்கு ஒருத்தர் சம்பாதிக்க வேண்டும். இன்னொருத்தர் சமைத்துப் போட வேண்டும் என்று இல்லாமல் அவர் ஒருவராகவே நடத்திவிடுகிறார். நம் அப்பா அம்மா மாதிரி, சுவாமி சரக்குகள் வாங்க வெளியே போக வேண்டாம். எல்லாச் சரக்குக்கும் மூலம் அவரேதான். குணங்களும் சரக்குகள் மாதிரிதான். இந்தக் குணங்கள் எல்லாவற்றுக்கும்கூட சுவாமியேதான் மூலம். அவர் குணக்கடல். எல்லாக் குணங்களும் அவரிடமிருந்துதான் வந்தன. அப்பாவும் அம்மாவும் நமக்குத் தருகிற சாமான்களுக்கெல்லாம் மூலம் சுவாமியிடமே இருக்கிற மாதிரி, அவர்கள் இருவரும் நம்மிடம் காட்டுகிற அன்புக்கும் மூலம் சுவாமியிடம்தான் இருக்கிறது.

நமக்கு எப்போதும் நல்லதையே நினைத்துக்கொண்டு, நம்முடைய சந்தோஷத்துக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கிக்கொள்கிற அன்பு நம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இருக்கிறதல்லவா? நாம் நல்லவர்களாக வேண்டும்; புத்திசாலிகளாக வேண்டும்; நாம் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்பதுதானே, நம் பெற்றோரின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது? இதற்காகவேதான் அவர்கள் சில நேரம் நம்மைத் தண்டிக்கிறார்கள்; கண்டிக்கிறார்கள். இதைக்கொண்டு நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது.

நம்முடைய நல்லதை நினைத்தேதான் அவர்கள் கண்டிக்கிறார்கள் என்று உணர வேண்டும். அவர்கள் கோபித்துக் கொண்டாலும், அதற்குக்கூடக் காரணம் நம்மிடம் அவர்களுக்குள்ள அன்புதான். இந்த அன்பினால்தான் அவர்கள் நம்மை வளர்த்துப் படிக்க வைத்து, நமக்கு உடம்புக்கு வந்தால் இரவெல்லாம் கண் விழித்துக் கவனித்து, எல்லாக் காரியங்களும் செய்கிறார்கள். இப்பேர்ப்பட்ட அன்பு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், இந்த அன்பு என்ற சரக்குக்கும் மூலம் சுவாமிதான். சுவாமியேதான் அப்பா அம்மா என்கிற உருவங்களில் வந்து நம்மிடம் அன்பைச் செலுத்துகிறார்.

(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்