வார ராசிபலன் 10-10-2019 முதல் 16-10-2019 வரை (துலாம்  முதல் மீனம் வரை)

By செய்திப்பிரிவு

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் புதனுடன் இணைந்து ராசிநாதன் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டும். மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியத்துடன் திட்டமிடுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வர்த்தக ஆர்டர் வந்து சேரும். உத்தியோகத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை இருக்கும். பெண்களுக்கு, மனரீதியாக அலைக்கழிப்பு இருக்கும். எதையும் தீர ஆலோசித்துச் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு, சாதுரியமான பேச்சால் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரவு கூடும். மனக்குழப்பம் நீங்கும். திறமையாகச் செயல்பட்டு பாராட்டுகள் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு. நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 3, 5, 6.
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் நான்காம் பார்வையாகப் பார்க்கிறார். சாமர்த்தியமான பேச்சால் காரிய வெற்றி உண்டாகும். வழக்குகளைத் தள்ளி போட்டுப் பேசித் தீர்த்துக்கொள்ள முயல வேண்டும். ஆயுதம், தீயைக் கையாளும்போது கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை அவசியம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம். பெண்களுக்கு, திறமையான பேச்சால் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு, உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, கடின உழைப்பால் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை பஞ்சமாதிபதி செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார். எதிர்ப்புகள் அகலும். மனைவி, குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். புது நபர்களின் ஆலோசனைகளைக் கேட்கும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில், கூடுதல் பணியைக் கவனிக்க வேண்டி இருக்கும்.

மேலதிகாரிகள், சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அரசியல்வாதிகளுக்கு, சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவர்களுக்கு, வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: அம்பாளுக்கு முல்லை மலர் அர்ப்பணித்து வணங்க வேண்டும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சப்தமாதிபதி சந்திரன் ராசியில் சஞ்சரிப்பதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உங்களது திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள். பெண்களுக்கு, உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். பணவரவு திருப்தி தரும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

கலைத் துறையினருக்கு, எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. துயரங்கள் தீரும். பேச்சில் இனிமையால் காரியம் கைகூடும். அரசியல்வாதிகளுக்கு, சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணவரவைப் பெறலாம். மாணவர்களுக்கு, தடங்கல் இன்றி நன்றாகப் படிப்பீர்கள். ஆசிரியர்கள், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை ராசிநாதன் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் பார்க்கிறார். புதிய தொடர்புகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் எதையும் பேசித் தெளிவுபடுத்திக்கொள்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். அதிகாரப் பதவிகள் தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.

பெண்களுக்கு, அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். கலைத் துறையினருக்கு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, சாதகமான காலகட்டமாக இருந்தாலும் ஆராய்ந்து செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
திசைகள்: மேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: மஹாலட்சுமிக்குத் தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரியத் தடைகளைப் போக்கும். நன்மைகள் கிடைக்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைச் சூரியன், செவ்வாய், ராசிநாதன் குரு ஆகியோர் பார்க்கிறார்கள். நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டில் விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்களும் எதிர்பார்த்தபடி நடக்கும். பெண்களுக்கு, அடுத்தவர்களுக்கு உதவும்போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். கலைத் துறையினருக்கு, எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சினைகள் தீரும். அரசியல்வாதிகளுக்கு, சாமர்த்தியமான உங்களது செயலைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்குக் கொண்டைக் கடலையைக் கட்டி நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்