மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியைச் செவ்வாய் - புதன் - சுக்கிரன் என மூன்று கிரகங்கள் பார்க்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்குப் பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் பணவரவு உண்டு. புதிய தொழிலில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. பெண்களுக்கு, அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான பேச்சால் எதிலும் வெற்றி கிடைக்கும்.
கலைத் துறையினருக்கு, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தித் தெளிவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். மாணவர்களுக்கு, உயர் கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். கூடுதல் மதிப்பெண் பெறப் படிப்பில் வேகம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்.
எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியையும் தைரிய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் துணிச்சலுடன் எதையும் செய்வீர்கள். உங்களது செயல்களால் பாராட்டு கிடைக்கும். எதிலும் தயக்கமோ பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள். ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருவாய் இருக்கும். உத்தியோகத்தில் கடின முயற்சிக்குப் பிறகு காரியம் முடியும்.
கணவன் மனைவிக்குள் பேசி முடிவெடுத்த பிறகு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுங்கள். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாகக் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 5, 6.
பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனுக்குத் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் மனக்கவலையை நீக்குவார். வியாபாரம், தொழிலில் செலவுகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். புதிய தொழில் பற்றி ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல பதவிகள் வந்துசேரும். புதிய வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். பெண்களுக்கு, எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும். கலைத் துறையினருக்கு, பிரச்சினைகள் குறையும்.
பெரியவர்களிடம் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்ல வேண்டும். மாணவர்களுக்கு, கல்விச்செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை.
எண்கள்: 2, 5, 6.
பரிகாரம்: பெருமாளுக்குத் துளசியால் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சந்திரன் மறைவு ஸ்தானத்தில் உலவுவதால் எதிலும் கவனமாகச் செயல்பட வேண்டும். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் நிலவும். தொழில், வியாபாரத்தில் தாமதப்போக்கு காணப்படும். தொழில் விரிவாக்க முயற்சிகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். பெண்களுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றிபெறுவீர்கள். பிறரைப் பற்றி விமர்சனங்களைச் சொல்ல வேண்டாம்.
கலைத் துறையினருக்கு, போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடையக் கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். கல்விப் பயணம் செல்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்ய எல்லாக் காரியங்களும் கைகூடும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் பாக்கியாதிபதி செவ்வாயின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் சோர்வு, மனக்குழப்பம் ஏற்பட்டாலும், அவை நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையால் முன்னேற்றம் கிட்டும். உத்தியோகத்தில் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பீர்கள். வேலை தொடர்பில் பயணங்கள் இருக்கும். பெண்களுக்கு, சில காரியங்களில் கூடுதல் கவனத்தையும் உழைப்பையும் செலுத்துவீர்கள்.
கலைத் துறையினருக்கு, உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெள்ளை.
எண்கள்: 1, 6.
பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் சூரியன் - செவ்வாய் இணைந்து சஞ்சாரத்தில் உள்ளனர். புதிய திட்டங்கள் உருவாகும். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பயணங்கள் நேரும். தொழில், வியாபாரத்தில் நேரடி கவனம் தேவை. தேவையான பணம் தாமதமாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும்.
எதிர்ப்புகள் அகலும். பெண்களுக்கு, கடன் பிரச்சினைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் நட்பும் கிடைக்கலாம். கலைத் துறையினருக்கு, சகாக்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, கடந்த காலத்தில் உங்களைப் பிரிந்து சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிக்கும்போது மனத்தை ஒருமுகப்படுத்திப் படியுங்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago