மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ராசியை எட்டாம் பார்வையால் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் திறன் அதிகமாகும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் நிலை மேம்படும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.
கணவன் மனைவிக்குள் மனத்தடை மறைந்து ஒற்றுமை ஓங்கும். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு, வீண் சண்டையைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
திசைகள்: கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு.
எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் ஆட்சியாக இருப்பதால் அறிவுத்திறன் மேலோங்கும். உங்களது பேச்சு ஈர்ப்பதாக இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம்பேசாமல் இருத்தல் வேண்டும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.
பெண்களுக்கு, மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றி பெறும். கலைத் துறையினருக்கு, எல்லா நன்மைகளையும் தடையில்லாமல் அடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு, நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். உபரி வருவாயால் கடன் அடைபடும். மாணவர்களுக்கு, தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனத்தை ஒருமுகப்படுத்திப் பாடங்களைப் படியுங்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி.
திசைகள்: வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மஞ்சள், வெள்ளை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: பெருமாளை வணங்கி வர மனோதைரியம் கூடும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். வாகன யோகம் உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். உத்தியோகத்தில் கொடுத்த வேலையைச் செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு, வீண் மனக்கவலை உண்டாகலாம். காரியங்களில் தடை, தாமதம், வீண் செலவு ஏற்படலாம்.
கலைத் துறையினருக்கு, ஓய்வில்லாமல் பணிகள் இருக்கும். கூடுதல் வருமானமும் வரும். லாபம் பெருகும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். மாணவர்களுக்கு, சோம்பேறித்தனத்தை விட்டுப் பாடங்களை நன்கு படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம்.
எண்கள்: 1, 5, 8.
பரிகாரம்: முருகனை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சந்திரனின் சஞ்சாரத்தால் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாகக் கைக்குப் பணம் வந்து சேரும். பெண்களுக்கு, புத்திசாதுரியம் அதிகரிக்கும்.
பயணங்களின் போது கவனம் தேவை. பெண்களுக்கு, அலுவலகத்தில் பொருட்களைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். கலைத் துறையினருக்கு, கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அதீதக் கவனத்துடன் செயல்படுங்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். மனத்துக்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றமடைய அதிகக் கவனத்துடன் பாடங்களைப் படிக்க வேண்டும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெள்ளை, பச்சை.
எண்கள்: 2, 6.
பரிகாரம்: வாராகி தேவியை அர்ச்சனை செய்து வணங்கினால் எல்லாக் கஷ்டமும் நீங்கும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சூரியன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். மனத்தில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடைநீங்கிச் சாதகமான பலன்தரும். உங்களுக்கான வேலைகளைச் சரியான நேரத்தில் செய்து முடித்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் புரிந்துகொண்டு செயல்படுவது நன்மையைத் தரும். பெண்களுக்கு, பேச்சுத் திறமையால் காரியங்களைச் சாதகமாகச் செய்து முடிப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு, அருமையான காலம் இது. நல்லதை மட்டும் யோசியுங்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாடும் நிலை ஏற்படலாம். முரண்படுபவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கப் பாடுபட்டுப் படிப்பீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
திசைகள்: கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: சிவபெருமானை வணங்க காரியத் தடை நீங்கும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியில் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகை சேரும் காலகட்டம் இது.
பெண்களுக்கு, பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சியைத் தொடர்வதால் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அரசியல்வாதிகளுக்கு, தேவையான நிதியுதவி கிடைக்கும். பணிச்சுமை குறைந்து காணப்படும். மாணவர்களுக்கு, கல்வி முயற்சிகளில் தடை ஏற்படலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நிலம், மஞ்சள்.
எண்கள்: 2, 4, 7.
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லாப் பிரச்சினைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago